திபெத் சுற்றுலா வாரியம் நாட்டுப்புறச் சுற்றுலா மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை விருந்தினர்களாக திபெத் இன விவசாய குடும்பத்துக்கு அழைப்பது, திபெத் புத்தாண்டை கொண்டாடும் பாரம்பரிய பழக்கவழக்கங்களை அனுபவிப்பது, திபெத் இனத்தின் பாரம்பரிய உணவுகளை ருசி பார்ப்பது முதலிய நடவடிக்கைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
திபெத் புள்ளிவிபரப் பணியகத்தின் புள்ளிவிபரங்களின்படி, இரு விழாக்களின் போது, 5 கோடியே 50 லட்சம் யுவான் சுற்றுலா வருமானத்தை திபெத் நனவாக்கியுள்ளது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகரித்தது.