சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பழம்பெரும் நூல்களின் கணக்கெடுப்பு பணி இவ்வாண்டு அதிகாரப்பூர்வமாக துவங்கும்.
சீனாவில் ஏற்கனவேயுள்ள திபெத் மொழி பழம்பெரும் நூல்களின் மொத்த எண்ணிக்கை, பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவற்றில், சுமார் மூன்றில் இரண்டு பகுதி நூல்கள் திபெத்தில் இருக்கின்றன. வரலாற்றுக் காரணம் முதலியவற்றால், திபெத்தில் இந்நூல்களின் பராமரிப்பு நிலைமை சீராக இல்லை. பழம்பெரும் நூல்களின் பாதுகாப்புக் கடமை கடினமானது. மேலும் இத்துறையிலான திறமைசாலிகளின் நிலையும் பற்றாக்குறையாக இருக்கின்றது.
பழம்பெரும் நூல்கள் கணக்கெடுப்புப் பணியைத் துவக்குவது, திபெத்தின் பண்பாட்டு மரபுச் செல்வங்களை மீட்யெடுத்து, பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்து பண்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.