இவ்வாண்டு சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலை உருவாக்கும் போக்கை வலுப்படுத்துவதன் மூலம், திட்டங்களையும், வாரிசு பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் பெரிதும் மேற்கொண்டு, திபெத் அரசு பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களை பன்முகங்களிலும் பாதுகாக்கும்.
2006ம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் 2009ம் ஆண்டு வரை, திபெத்தில் 14 வகைகளைச் சேர்ந்த 406 பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களும், 83 பாரம்பரிய இசை நாடக அரங்கேற்ற நிறுவனங்களும் கண்டறியப்பட்டன. தவிர, 1177 வாரிசுகளும் கண்டுபிடிக்கப்பட்டனர். திபெத்தில் தேசிய நிலை மற்றும் தன்னாட்சிப் பிரதேச நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பிரதிநிதிப் படைப்புகளைப் பாதுகாத்து, கையேற்றுவதற்கு, சுமார் 4 கோடியே 40 லட்சம் யுவானை நடுவண் அரசும், திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசும் தனித்தனியாக ஒதுக்கீடு செய்துள்ளன.