• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அத்தியாவசிய மருந்துகள் அமைப்புமுறைச் சீர்திருத்தம்
  2010-02-26 16:45:34  cri எழுத்தின் அளவு:  A A A   

அத்தியாவசிய மருந்துகள் அமைப்புமுறையை நடைமுறைப்படுத்துவது, மருந்து மற்றும் சுகாதார அமைப்புமுறைச் சீர்திருத்தத்தை சீனா ஆழமாக்கும் பணிகளில் ஒன்றாகும். இவ்வமைப்புமுறை மூலம், பொது மக்கள் அடிப்படை மருத்துவச் சிகிச்சைச் சேவைவை பெற்று வருகின்றனர். சமூகத்தின் நேர்மையை நனவாக்குவது உள்ளிட்ட லட்சியத்தை அடைய முதலியவற்றுக்கு இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது இவ்வமைப்புமுறை சுமூகமாக நடைமுறைக்கு வருகின்றது என்று, 26ம் நாள் சீனச் சுகாதார அமைச்சகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தொடர்புடைய பொறுப்பாளர் தெரிவித்தார். பரிசோதனை ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலே, பொது மக்களின் மருந்துச் சுமை குறைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து, சீன சுகாதார அமைச்சகத்தின் மருந்துக் கொள்கை மற்றும் அத்தியாவசிய மருந்து அமைப்புமுறை பிரிவின் தலைவர் செங் ஹொங் கூறியதாவது

இவ்வாண்டின் பிப்ரவரி திங்களின் இறுதி வரை, நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் 18ஆயிரம் அரசு சார் சுகாதார நிறுவனங்களில் மேற்கூறிய அமைப்புமுறை நடைமுறைக்கு வந்தது என்று அவர் அறிமுகம் செய்தார்.

இதன் விரைவாக, பொது மக்கள் செலுத்த வேண்டிய கட்டணம் பயனுள்ள முறையில் குறைந்தது என்று செங் ஹொங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

ஹு நான் மாநிலத்தின் வூ லிங் யுவான் பிரதேசம் முழுவதிலும் உள்ள மருத்துவ சுகாதார நிறுவனங்களில், வாங்கப்படும் அதே விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பிறகு, மருந்துகளின் விலைவாசி 50விழுக்காடு குறைந்தது. அத்துடன், பொது மக்களின் மருந்து சார் சுமையும் குறைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அரசு சார் மருத்துவ சுகாதார நிறுவனங்களில் மருந்துகள் இத்தகைய முறையில் விற்பனை செய்யப்பட்ட பிறகு, இந்நிறுவனங்களின் வருமானம் குறைவது உறுதி. எனவே, உயர் நிலை பொருளாதார மற்றும் சுகாதார வசதிகளையை கொண்ட பிரதேசங்களில், இவ்வமைப்புமுறை தடையின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. திட்டப்படி, சீனாவின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய அத்தியாவசிய மருந்துகள் அமைப்புமுறை 2020ம் ஆண்டுக்களுள் பன்முகங்களிலும் நடைமுறைக்கு வரும். அடுத்த காலக்கட்டத்தில் இப்பணியில் இன்னல்கள் அதிகரிக்கக் கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த நிலைமையைச் சமாளிக்க, எதிர்காலத்தில் மேலதிக நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும். இந்த அத்தியாவசிய மருந்துகள் அமைப்புமுறைச் சீர்திருத்தம் மேலும் விரிவாகும், பரவலாகும். இதன் மூலம், இச்சீர்திருத்தம் எதிர்பார்த்த பயனை அடைய முடியும் என்று செங் ஹொங் தெரிவித்தார்.

இந்த அமைப்புமுறை சீனாவில் பன்முகங்களிலும் தொடர்ச்சியாகவும் நடைமுறைக்கு வருவதை உத்தரவாதம் செய்யும் வகையில், நீண்டகால நிதியுதவி அமைப்புமுறையும் நிறுவப்படும் என்று அறியப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040