• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் கூட்டம்
  2010-02-28 18:52:05  cri எழுத்தின் அளவு:  A A A   
2 நாட்கள் நீடித்த 20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் துணையாளர் கூட்டம் 28ந்நாள் தென் கொரியாவின் Incheon Song Do தீவில் நிறைவடைந்தது. நிதி நெருக்கடிக்கு பிந்திய உலகப் பொருளாதார நிலைமை பற்றி மதிப்பிடப்பட்டு, இவ்வாண்டு நடைபெறும் இரண்டு நிதி உச்சி மாநாடுகளில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் கால அட்டவணை பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மறைமுக முறையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பின் செய்தி அறிக்கை வெளியிடப்படவில்லை.
உலகப் பொருளாதாரத்தின் வலுவான, தொடர்ச்சியான, சமமான அதிகரிப்பைத் தூண்டுவது, சர்வதேச நிதி நிறுவனங்களின் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவது, சர்வதேச நிதி நிறுவனங்களின் கண்காணிப்பை வலுப்படுத்துவது ஆகியவை பற்றி இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. நிதி நெருக்கடியைக் கூட்டாக சமாளிக்கும் பொருட்டு, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதென கூட்டத்தில் பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். தென் கொரிய செய்தி ஊடகம் இதை அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040