• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அடுத்த 10 ஆண்டுகாலக் கல்வி சீர்திருத்தம்
  2010-03-01 10:17:30  cri எழுத்தின் அளவு:  A A A   

2010 முதல் 2020ம் ஆண்டு வரையான நாட்டின் கல்வி சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான வரைவுத் திட்டத்தை, சீன கல்வி அமைச்சகம், 28ம் நாள் பெய்ஜிங்கில் வெளியிட்டது. மக்கள் அதிகமாக கவனம் செலுத்துகின்ற கல்விப் பிரச்சினைக்கு இது பதிலளித்தது. 2020ம் ஆண்டுக்குள், மனித வள வல்லரசை உருவாக்குவதென்ற சீனாவின் உத்திநோக்கு இலக்கையும் இது திட்டமிட்டது.
நாட்டின் நீண்டகால கல்விச் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான திட்டம், புதிய நூற்றாண்டில் சீனாவின் முதல் கல்வித் திட்டமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு இது வழிகாட்டும். சீன தலைமையமைச்சர் வென்சியாபாவின் தலைமையில், 40 முறை சரிப்படுத்தப்பட்ட பின், இந்த வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டது. சீனா, 2010ம் ஆண்டில் கல்வியின் நவீனமயமாக்கத்தை நனவாக்கும். கல்வி மீது ஆர்வம் காட்டும் சமூகத்தை உருவாக்கும். மனித வள வல்லரசாக மாறும் என்பது இத்திட்டத்தின் இலக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போது, சீனா கட்டாய கல்வியை பொதுவாக பரவலாக்கும். 90 விழுக்காட்டு மாணவர்கள் உயர் பள்ளி கல்வியை பெறுவர். சுமார் 20 கோடி பேர் பல்கலைக்கழகக் கல்வியை பெறுவர்.
முந்தைய சீர்திருத்தத்துடன் வேறுபட்டு, திறமைசாலிகளைப் உருவாக்கும் முறைமையின் சீர்திருத்தம், எதிர்காலத்தில் முதலிடத்தில் வைக்கப்படும் என்று சீன கல்வி அமைச்சர் yuan guiren தெரிவித்தார்.

முன்பை விட, திறமைசாலிகளுக்கு பயிற்சியளித்து வளர்க்கும் பணிக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கிறோம். பன்முகங்களிலும் வளர்ச்சி பெறும்ம மேலதிக புத்தாக்க ஆற்றலுடைய திறமைசாலிகளை உருவாக்குவது, கல்வியின் அடிப்படை நோக்கமாகும். இதைத் தடுக்கின்ற அனைத்தையும் மாற்றி சீர்திருத்துவோம் என்று அவர் கூறினார்.
தவிர, கல்வியின் நியாயத் தன்மையை மேம்படுத்தி, கல்வி தரத்தை உயர்த்துவது, கல்விச் சீர்திருத்தத்தின் முக்கிய பணியாகும் என்று yuan guiren கூறினார்.

கல்வி நியாயம்,  சமூகச் சம நிலையின் அடிப்படையாகும். பிரதேசங்களிடை, நகர்ப்புற-கிராமப்புறங்களுக்கிடை சமமற்ற கல்வி நிலையை நீக்குவது, முக்கிய பணியாகும். தவிர, கல்வி தரத்தையும் உயர்த்துவோம். வரையறையை உறுதிப்படுத்தி, கண்காணிப்பு முறைமையை மேம்படுத்துவோம். இந்த 2 பணிகள், அடுத்த 10 ஆண்டுகளின் முக்கிய கடமைகளாகும் என்று அவர் கூறினார்.
தவிர, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை பல்வேறு நிலை அரசுகள் முன்னுரிமையுடன் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று இத்தி்ட்டம் தெரிவித்தது. சமூக நிதியை திரட்டி கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வதையும் அது ஊக்குவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040