அடுத்த 5 ஆண்டுகளுக்குள், திபெத் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென ஆயிரம் கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் திபெத் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திரையை அடிப்படையில் கட்டிமுடிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
தற்போது திபெதில் இயற்கைப் புகலிடங்களின் நிலப்பரப்பு 4 லட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேலாகும். முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய 120க்கு மேற்பட்ட வன விலங்கு வகைகள் உள்ளன. சுற்றுச்சூழலை மேலும் சிறப்பாக பாதுகாக்கும் வகையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசம் முழுவதிலும் வேதியியல் தொழில் இல்லாத நிலை உருவாகியுள்ளது. அதேவேளை, திபெத் மருந்து, சுற்றுலா உள்ளிட்ட மாசற்ற தொழில்களையும் திபெத் பெரிதும் வளர்த்து வருகிறது.
புள்ளிவிபரங்களின்படி, கடந்த 9 ஆண்டுகளில், திபெத் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சீன நடுவண் அரசு 800 கோடி யுவானுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.