• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் ஐரோப்பிய ஒன்றிய அரங்கம்
  2010-03-03 10:39:41  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 2ம் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 60வது நாளாகும். ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன தூதுக் குழுவும் நடத்திய ஷாங்காய் உலகப் பொருட்காட்சியிலான ஐரோப்பிய ஒன்றிய அரங்கு பற்றிய பரப்புரை நடவடிக்கையும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நிழற்படக் கண்காட்சியின் துவக்க விழாவும், 2ம் நாளிரவு பிரசல்ஸிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் நடைபெற்றன.
சீனாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் Serge Abou இந்த நடவடிக்கைகளுக்காக பெய்ஜிங்கிலிருந்து பிரசல்ஸுக்கு சென்றார். ஐரோப்பிய-சீன உறவை முன்னேற்றி உலகிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் சிறப்பாக அறிமுகப்படுத்துவது, இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார். "மதிநுட்பமான ஐரோப்பா" எனும் இந்த அரங்கம், ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பத்தையும் இணக்கமான நகர்ப்புற வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தும்.
உரை 2
ஐரோப்பிய ஒன்றிய அரங்கத்தில், ஐரோப்பிய மக்களின் வாழ்க்கை, உற்பத்தி நடவடிக்கைகள், இவ்வொன்றியத்தின் அமைப்பு முறை, வளர்ச்சிப் போக்கு முதலியவற்றை நீங்கள் அறிய முடியும். குறிப்பாக, ஐரோப்பிய மக்கள் நகரங்களில் எப்படி வாழ்கின்றனர் என்பதை நீங்கள் அறியலாம். இது, மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற தலைப்பை வெளிப்படுத்துகிறது என்று அவர் பரப்புரை நடவடிக்கையில் கூறினார்.
2ம் நாளிரவு துவங்கிய நிழற்படக் கண்காட்சியில், உலகப் பொருட்காட்சியின் பல்வேறு அரங்கங்கள், ஷாங்காய் மக்கள் இப்பொருட்காட்சியை வரவேற்கின்ற நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய 80க்கு மேலான நிழற்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பார்வையாளர்கள், சீனாவின் விரைவான வளர்ச்சி பற்றியும் சீன மக்களின் உற்சாகம் பற்றியும் வெகுவாக பாராட்டினர். ஷாங்காய்க்கு சென்று இப்பொருட்காட்சியைப் பார்க்க தங்கள் எதிர்பார்ப்பை அவர்கள் தெரிவித்தனர்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நெருங்கி வரும் வேளையில், அரங்கங்களின் கட்டுமானம் கடைசி கட்டத்தில் நுழைந்தது. 95 விழுக்காட்டுக்கு மேலான கட்டுமானங்கள் முடிவடைந்தன. சீனா பல்வேறு தரப்புகளுடன் ஒத்துழைத்து முழு முயற்சியுடன் ஆயத்தப்பணியை செய்து வருகிறது என்று ஐரோப்பாவிலுள்ள சீன தூதுக்குழுவின் தலைவர் song zhe கூறினார்.
உரை 6
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், பரிமாற்றத்தை முன்னேற்றி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மேடையாக இப்பொருட்காட்சி மாற, ஆயத்தக் குழு பாடுபாட்டு வருகிறது. இப்பொருட்காட்சி மூலம், சீன-ஐரோப்பிய புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்படுத்தும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040