• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடர்
  2010-03-03 18:23:15  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 3வது கூட்டத்தொடர் மக்கள் மா மண்டபத்தில் துவங்கியது. ஹு சிந்தாவ், வூ பாங்கோ, வென் சியாபாவ், ஜியா சிங்லின் உள்ளிட்ட சீனக் கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்களும் 2100க்கு அதிகான உறுப்பினர்களும் துவக்க விழாவில் கலந்துக் கொண்டனர்.

2009ஆம் ஆண்டு அரசியல் கலந்தாய்வு மாநாட்டுக்கு 5820 கருத்துருக்கள் கிடைத்தன. அதில் 1800 கருத்துருக்கள் சர்வதேச நிதி நெருக்கடி சமாளிப்பு மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்புடையவை. இதனை ஜியா சிங்லின் பணியறிக்கையில் பாராட்டினார். சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பது, மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் திறனுக்கு முக்கிய சோதனையாகும் என்று அவர் கூறினார்.

"சர்வதேச நிதி நெருக்கடியின் வளர்ச்சிப் போக்கு மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் செயல்பாட்டில் கவனம் செலுத்தி, நடைமுறைக்கு ஏற்ற ஆய்வுகளை வலுப்படுத்துகின்றோம். தொடர்பான கருத்துருக்கள் ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையை முழுமைப்படுத்துவதில் கட்சி மற்றும் அரசுக்கு முக்கிய கருத்துக்களை வழங்கியுள்ளன" என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது—

"சோஷியலிச ஜனநாயக அரசியலை வளர்க்கும் நடைமுறையை இணைத்து, குடிமக்களின் ஒழுங்கான அரசியல் பங்கினை விரிவாக்குவதில் முக்கிய வழி மற்றும் மேடையாக விளங்கும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பங்கை வெளிக்கொணர்ந்து, பல்வேறு கட்சிகள், குழுக்கள், இனங்கள், பிரிவுகள் மற்றும் துறைகளைச் சேர்ந்தவர்களை அரசு விவகாரங்களில் பரந்தளவில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டை, மக்கள் அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கேற்று கருத்துக்களை வெளிப்படுத்தும் பயனுள்ள மற்றும் முக்கிய வழியாகச் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

10 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், இம்மாநாட்டின் உறுப்பினர்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கையையும், கருத்துரு பற்றிய பணியறிக்கையையும் கேட்டறிந்து பரிசீலிப்பர். சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் அவர்கள் கலந்து கொண்டு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி பற்றிய கொள்கைகளைப் பற்றியும் பொது மக்கள் அக்கறை செலுத்தும் பிரச்சினைகளைப் பற்றியும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைத் தெரிவிப்பர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040