• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
Li Zhaoxingகின் கருத்து
  2010-03-04 15:54:35  cri எழுத்தின் அளவு:  A A A   
வர்த்தகம், தைவான், திபெத் ஆகிய பிரச்சினைகள் கவலைப்படத்தக்கவையல்ல என்று 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் Li Zhaoxing 4ம் நாள் தெரிவித்தார்.

2001ம் ஆண்டில், சீனா, உலக வர்த்தக அமைப்பின் 143வது உறுப்பு நாடாக மாறியது. அதற்குப் பின், வெளிநாடுகளுடனான சீனாவின் வர்த்தகம், இவ்வமைப்பின் விதிகளின்படி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, திபெத்தும் தைவானும், சீனாவின் உரிமைப் பகுதிகளாகும் என்று பிரான்ஸ் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் Li Zhaoxing கூறினார்.

ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டின்படி, அரசுரிமையைக் கொண்ட நாடுகளுக்கிடையில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்க வேண்டும். ஒன்று, மற்றதன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி, வர்த்தகத் துறையில், நேர்மை, நியாயம், சமத்துவம், ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது ஆகியவற்றை சீனா மேற்கொள்ளும். வர்த்தகம், தைவான், திபெத் ஆகிய பிரச்சினைகள், எளிதில் தீர்க்கப்படக் கூடியவை. எனவே இவை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று Li Zhaoxing கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040