ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பற்றி செய்தியாளர்கள் செய்திகளைத் திரட்ட வரவேற்பதாக 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடரின் செய்தித் தொடர்பாளர் Li Zhaoxing தெரிவித்தார்.
இக்கூட்டத் தொடரின் முதலாவது செய்தியாளர் கூட்டம் மார்ச் 4ஆம் நாள் முற்பகல் மக்கள் மா மண்டபத்தில் நடைபெற்றது. செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், பொருளாதார வர்த்தகம், சர்வதேச நாணயம் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்வதில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பல்வேறு நாடுகள், பிரதேசங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுக்கு நல்ல வாய்ப்பு மற்றும் மேடையை வழங்கும் என்று அவர் கூறினார்.