• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு இலக்கு
  2010-03-05 10:10:10  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு சீன சமூகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இலக்குகளை சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் வழங்கிய அரசின் பணியறிக்கையில் வெளிப்படுத்தினார். உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு இலக்கு, 8 விழுக்காடாகும் என்று அவர் தெரிவித்தார்.
5ம் நாள் காலை, 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் பெய்ஜிங்கில் துவங்கியது. தலைமையமைச்சர் வென்சியாபாவ், அரசவையின் சார்பில் அரசின் பணியறிக்கையை வழங்கினார்.
நகர்புறத்தில் 90 இலட்சத்துக்கு மேலான புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, வேலை இழப்பு விகிதத்தை 4.6 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்துவது, நுகர்வு விலைவாசியின் அதிகரிப்பை 3 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்துவது, சர்வதேச வரவுச் செலவு நிலையை மேம்படுத்துவது ஆகிய இலக்குகளை வென்சியாபாவ் அறிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி முறையை மாற்றி, பொருளாதார கட்டுக்கோப்பை சரிப்படுத்துவது, பல்வேறு தரப்புகளின் முக்கிய பணியாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040