• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனம்
  2010-03-05 16:20:06  cri எழுத்தின் அளவு:  A A A   
11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடர், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 3வது கூட்டத் தொடர் ஆகியவற்றின் மீது பெல்ஜியம், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, பிரேசில் முதலிய நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்தி கட்டுரைகளை வெளியிட்டன.
சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் 5ம் நாள் வழங்கிய அரசுப் பணியறிக்கை பற்றி De Morgen என்ற பெல்ஜிய செய்தி ஏடு உடனடியாக கட்டுரை வெளியிட்டது.
சீன அரசின் தலைமையில், 2010ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார அதிகரிப்பு 8 விழுக்காடு என்ற வேகத்தை நிலைநிறுத்தும் என்று ஆஸ்திரிய வானொலி நிறுவனத்தின் இணையம் அறிவித்தது.
ஜெர்மன் செய்தித் தொலைகாட்சி நிலையம் சீனாவின் இராணுவ வரவு செலவு திட்டம் பற்றி செய்தியை வெளியிட்டது. 2010ம் ஆண்டு சீன இராணுவ வரவு செலவு அதிகரிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மிகக் குறைவாகும் என்று இது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040