உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிட்டு கூட்டாக அனுபவிப்பதை வரவேற்பதாக தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் ஷாங்காய் மாநகராட்சித் தலைவருமான han zheng 7ம் நாள் தெரிவித்தார்.
சீன காட்சி அரங்கு, 42 வெளிநாடுகளின் காட்சி அரங்குகள், நகரத்தின் நடைமுறை பிரதேசம் முதலிய ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சிறப்புகளை hanzheng அறிமுகப்படுத்தினார்.
அவை, பல்வேறு நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டுத் துறைகளிலான புதிய கருத்துக்களை வெளிப்படுத்தும். இது, சீன மற்றும் வெளிநாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் மேடையாக அமையும் என்று அவர் கூறினார்.