தலாய் லாமா, திபெத்தில் நிதானமற்ற நிலைமை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஆவார் என்று சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவருமான பத்மா சின்லே 7ம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தலாய் லாமா, மதவாதி மட்டுமல்ல, பிரிவினைவாதக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார். திபெத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, அவர் அடிக்கடி சிக்கல்களை உருவாக்கி வருகிறார். ஆனால், திபெத் மக்கள் இதைக் கண்டு பயப்படவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தான், திபெத் நிச்சயம் வளர்ச்சியடைய முடியம் என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர் என்றும் பத்மா சின்லே குறிப்பிட்டார்.