திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் மக்களால் அறிந்து கொள்ளப்படாத ரகசியங்களும் தகவல்களும் ஏதுமில்லை. வெளிப்படையாக காட்சிக்கு வைக்கப்படாத பொருட்கள் ஏதுமில்லை. பயணிகளும் செய்தியாளர்களும் திபெத்திற்கு வருகை தந்து திபெத்தை மேலதிகமாக அறிந்து கொள்வது வரவேற்ப்படுகிறது. சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டித் தலைவருமான ச்சியாங்பா புன்சோக் இவ்வாறு தெரிவித்தார்.
கடல் மட்டத்திலிருந்து அதிக உயரம், வசதியற்ற போக்குவரத்து, உள்ளிட்ட சிறப்பு நிலவியல் காரணிகளால், தனிநபர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யவென, கடந்த 80ம் ஆண்டின் இறுதி தொடக்கம், சில நிர்வாக அமைப்புமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டன. உண்மையான திபெத்தை அறிந்த கொள்ள, பயணிகளும் செய்தியாளர்களும் அதிகமாக திபெத்திற்கு வந்து, திபெத்தை அதிகமாக பார்வையிட்டு உணர்வதை வரவேற்பதாக அவர் கூறினார்.