சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் சுரங்கத் தாது மூலவளத்தை நியாயமான முறையில் அகழ்வு செய்யப் போவதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நில மூலவள ஆணையக் குழுவின் செயலாளரும் சீன பொறியியல் கழகத்தின் முனைவருமான தோஜி அண்மையில் லாசாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறினார். இப்போது திபெத்தில் 9 முக்கிய தாதுப் பொருளாதார வளர்ச்சி மண்டலங்கள் வரையறுக்கப்பட்டன.
இத்துறையில் திபெத்தின் தாது அகழ்வு திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வகிக்கும் பங்கு சுமார் 3 விழுக்காடு மட்டுமே. 2020ம் ஆண்டில் திபெத்தின் உற்பத்தி மதிப்பில் இந்த சுரங்கத் தாது அகழ்வு 30 முதல் 50 விழுக்காடு பங்கு வகிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தோஜி கூறினார்.