• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"தேர்தல் சட்டத்தின்" வரைவுத் திருத்தம்
  2010-03-08 17:24:32  cri எழுத்தின் அளவு:  A A A   

8ம் நாள் பெய்ஜிங்கில், 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரின் 2வது முழு அமர்வு

மார்ச் 8ம் நாள் பெய்ஜிங்கில் சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர் Wang Zhao Guo வழங்கிய "தேர்தல் சட்டத்தின்" வரைவுத் திருத்தம் பற்றிய விளக்கத்தை சுமார் 3000 தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் கேட்டறிந்தனர். தேர்தல் பிரதிநிதித்துவ உரிமையில், நகரவாசிகளும், கிராமப்புறவாசிகளும் சமமாக ஒரே விகிதத்தில், மக்கள் பேரவையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது, இவ்வரைவு திருத்தத்தின் மைய அம்சமாகும். Wang Zhao Guo கூறியதாவது:

"நகரவாசிகளும், கிராமப்புறவாசிகளும் ஒரே விகிதாச்சாரத்தின் படி, மக்கள் பேரவையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது செயல்படுத்தப்படும். பல்வேறு பிரதேசங்கள், பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு துறைகள் ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, 5 சட்டவிதிகள் மாற்றப்பட்டுள்ளன. முன்பு, நகரவாசிகள், கிராமப்புறவாசிகள் 4:1 என்ற விகிதத்தில் மக்கள் பேரவைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வரலாறு, 1:1 என்ற சமத்துவ அணுகு முறையால் பதிலாக்கப்படக்கூடும். இத்திருத்தம் பற்றி, தொடர்ந்து 2 முறைகளாக தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Hu Bei மாநிலத்தைச் சேர்ந்த கிராமப்புறவாசி Xin Xi Yu அம்மையார் எளிய சொற்களில், தமது கருத்தைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சமமான அணுகுமுறையில், ஒரே விகிதத்தின் படி நகரவாசிகள், கிராமப்புறவாசிகள் மக்கள் பேரவைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். கிராமப்புறங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளும் அதிகமாகும். எதிர்காலத்தில் எங்கள் பணிகள், ஆலோசனைகளை வழங்குதல் முதலியவற்றுக்கு இது சாதகமாக இருக்கும்" என்றார் Xin Xi Yu அம்மையார்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040