இவ்வாண்டு சீனாவின் வேளாண் வாரியம் 6 துறைகளிலான பணிகளை முக்கியமாக வலுப்படுத்தும். அதிக இடர்ப்பாடுடைய வேளாண் பொருட்களைச் சீர்படுத்துவது, ஒட்டுமொத்த, சீரான, நியாயமான வேளாண் பொருள் தரப் பாதுகாப்பு வரையறை முறைமையை உருவாக்குவது, வேளாண் பொருட்கள் சந்தையில் நுழைய அனுமதி வழங்கும் அமைப்பு முறையின் உருவாக்கத்தைத் தூண்டுவது முதலியவை, இவற்றில் இடம்பெறுகின்றன என்று Wei Chao An தெரிவித்தார்.