திபெத் தெற்காசிய நாடுகளுடன் வர்த்தக ஒத்துழைப்பு மேற்கொள்ள எல்லைப் பிரதேசத்தின் திறப்பு நிலையை உயர்த்துவதற்கு சீன வணிக அமைச்சகம் ஆதரவு அளிக்கும்.
கடந்த சில நாட்களில், சீன வணிக அமைச்சகமும், திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசும், உதவி மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. உடன்படிக்கையின்படி, திபெத் எல்லை நுழைவாயிலின் கட்டுமானத்தையும் திறப்பு நிலையையும் இரு தரப்புகளும் விரைவுபடுத்தும். தெற்காசியாவுக்கான தரை வர்த்தகப் போக்குவரத்தின் கட்டுமானத்தை மேகமாக்கும். தவிர, திபெத் ஏற்றுமதித் தளம், எல்லை வர்த்தக சந்தை முதலிய திட்டப்பணிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, லாசாவில் நாட்டு நிலை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் கட்டுமானத்தை ஆதரிக்கும். இரு தரப்புகளும், திபெத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.