• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிலக்கரிப் பயன்பாட்டு விகிதத்தை உயர்த்துவதில் கவனம்
  2010-03-11 14:36:29  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போதைய எரியாற்றல் கட்டமைப்பில் சீனா நிலக்கரியின் பயன்பாட்டு விகிதத்தை உயர்த்த வேண்டும். கணிசக் காலம் வரை நிலக்கரி சீனாவில் பதிலாக்கப்பட முடியாத எரியாற்றலாகும். 2050ம் ஆண்டில் மொத்த எரியாற்றலில் நிலக்கரி வகிக்கும் விகிதம் 50 விழுக்காட்டுக்கு மேலாக இருக்கும். ஆகவே தூய்மையான உயர் பயன் மிக்க முறையில் நிலக்கரியைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினரும் சீன அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் நிலக்கரிப் பயன்பாட்டு ஆய்வு அலுவலகத்தின் தலைவருமான zheng chu guang கூறியுள்ளார். 11ம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.


பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது என்பது கரியமில வாயுவை மட்டும் குறைப்பதல்ல. கரியமில வாயு காற்றில் நுழைவதை தடுப்பதாகும். இதைச் சேகரித்து வெளியேறாமல் தடுப்பதை நிறைவேற்ற வேண்டும். கரியமில வாயுவும் பயன்படுத்தப்படக் கூடிய மூலவளமாகும். அதன் பயன்பாட்டின் மூலம் எண்ணெய் அகழ்வு விகிதத்தை உயர்த்தலாம். சுத்திகரிக்காத எண்ணெயை அகழ்வு செய்யும் போது எண்ணெய் பாறையில் கரியமில வாயுவை பயன்படுத்தி உண்மையாக பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைக்கலாம் என்று அவர் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040