• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஊழல் ஒழிப்புப் பணியை முன்னேற்றும் மனவுறுதி
  2010-03-12 15:32:28  cri எழுத்தின் அளவு:  A A A   
இப்போது பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடர்களில் ஊழலின்றி நீதி தவறாது பணிபுரிவது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள அம்சங்களில் ஒன்றாகியது. சீர்கேட்டைத் தடுத்து அதற்குத் தண்டனை நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை சீனா அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தியுள்ளது. சீனத் தலைவர்கள் பல்வேறு இடங்களில் இந்த பணியை மறுபடியும் வலியுறுத்தி குறிப்பாக இப்பணி தொடர்பான அமைப்புமுறையின் கட்டுமானத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்த முயற்சிகள் அனைத்தும் சீன அரசு முன்வைத்த அதிகாரம் வெளிப்படையாக செயல்படுகின்ற குறிக்கோளை நிறைவேற்ற துணை புரியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
ஊழல் ஒழிப்பில் கவனம் செலுத்தி வருகின்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினர் huang shao liang கூறியதாவது. சோதனையிடப்பட்ட சில நகரங்களில் தலைமை ஊழியர் தம் சொத்துகளை பதிவு செய்யும் அமைப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட நிலைமையை பார்த்தால் இந்த செயல் பெரிதும் விளைவு பெற்றுள்ளது. பொது மக்கள் இதில் மனநிறைவு தெரிவித்துள்ளனர். அரசுப் பணியாளர் அவர்தம் சொத்தை பதிவு செய்வது பொது மக்கள் மற்றும் சமூகத்தின் கண்காணிப்பில் வைக்கப்படுகின்ற ஒரு முயற்சியாகும். தலைமை ஊழியர் ஊழலின்றி நீதி தவறாது பணிபுரியும் நிலைமையை மக்கள் மதிப்பிடச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
 
ஊழல் தடுப்பு அமைப்பு முறை சோதனைமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளையில் சீன அரசு கடந்த ஆண்டில் வேறு சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக இணையதளத்தில் புகார் செய்வது, ஊழல் ஒழிப்பு வாரியத்தின் புகார் தொலை பேசி எண்ணை வெளியிட்டது போன்ற நடவடிக்கைகள் பொது மக்கள் சீர்கேடு செய்யும் அதிகாரிகளை அம்பலப்படுத்துவதற்கு வசதியை உருவாக்கித் தந்துள்ளன.
 
ஊழல் ஒழிப்பு அமைப்புமுறையின் கட்டுமானத்தை முன்னேற்றும் அதேவேளையில் சீர்கேடுசெய்யும் அதிகாரிகளின் மீதான தண்டனை அளவை அதிகரித்துள்ளது. சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் துவங்கிய தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் அரசுப் பணியறிக்கை வழங்கிய போது இதை வலியுறுத்தினார். பல்வேறு தலைமை ஊழியர்கள் குறிப்பாக உயர் நிலை ஊழியர்கள் தம் பொருளாதார நிலை மற்றும் சொத்து பற்றி அறிவிப்பது பற்றிய மத்திய கமிட்டியின் கோரிக்கையை உறுதிப்பட பின்பற்ற வேண்டும். தன்னார்வத்துடன் கட்டுப்பாட்டு வாரியங்களின் கண்காணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரம் வெளிப்படையாக செயல்படுவதை தூண்ட வேண்டும் என்று தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040