அமெரிக்கா வெளியிட்ட 2009ம் ஆண்டுக்கான இதர நாடுகளின் மனித உரிமை செயல்பாடுகள் பற்றிய அறிக்கை, சீனாவின் திபெத், சின்ச்சியாங் ஆகியவற்றில் சிறுபான்மை தேசிய இனங்களின் மத மற்றும் பண்பாட்டுச் சுதந்திரம் அடக்கப்பட்டதாக, குற்றஞ்சாட்டியது. இந்த கூற்று, உண்மை நிலைமைக்குப் பொருந்தாதது என்று, திபெத் மற்றும் சின்ச்சியாங்கைச் சேர்ந்த தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
திபெத்தில், கூறப்படும் மதச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் பிரச்சினை, எங்கும் காண முடியாது என்று தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவருமான பத்மாசின்லே சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவருமான நுர் பெக்லி பேசுகையில், சீனா, இதர நாடுகளைப் போல, இணையதளத்தை சட்டப்படி நிர்வாகம் செய்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 5ம் நாள் நிகழந்த வன்முறை சம்பவத்தைப் பயனுள்ளதாக சமாளித்து, நிலைமையை அமைதிப்படுத்துவதற்கு, சின்ச்சியாங்கில் மேற்கொள்ளப்பட்ட இணைய நிர்வாக நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று தெரிவித்தார்.