மார்ச் 16ம் நாள், திபெத்தின் நாட்காட்டியின் இராண்டாவது திங்களின் முதல் நாளாகும். இது, வசந்த கால சாகுபடியின் முதல் நாளாக அமைகிறது. திபெத்தில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த விவசாயிகள், விழாவுக்கான ஆடை அணிந்து, சிறப்பாக விழாவை கொண்டாடி, அமோக அறுவடை பெற இறைவேண்டல் செய்தனர் என்று சீன மக்கள் நாளேடும், சின்குவா செய்தி நிறுவனமும் அறிவித்தன.
சீன அரசின் பெருமளவிலான ஆதரவுடன், திபெத்தின் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையின் இயந்திரமயமாக்கம், நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திற்கு, சீன அரசு 5 கோடி யுவான் மதிப்புள்ள விவசாயக் கருவிகளுக்கான மானியங்களை வழங்கியது என்று அறியப்படுகிறது.