
சீன விமான தொழிற்துறை குழுமம் தற்சார்பாக வடிவமைத்து தயாரித்த AC 313 பெரிய ரக பயணியர் ஹெலிகாப்டர் 18ம் நாள் ஜியாங்சி மாநிலத்தில் வெற்றிகரமாக முதல் பயணத்தை மேற்கொண்டது. சீனாவின் முதலாவது பெரியயர் ரக பயணி ஹெலிகாப்டர் இதுவாகும். அதன் செயல்திறன், உலகின் 3வது தலைமுறை ஹெலிகாப்டரின் நிலையை எட்டியது. ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்குப் பின் சீனா பெரிய ஹெலிகாப்டரை தற்சார்பாக வடிவமைத்து தயாரிக்கின்ற திறனைப் பெற்றுள்ளது என்று இது காட்டுகிறது. இந்த ஹெலிகாப்டரில் 27 பயணிகள் அல்லது காயமற்ற 15 பேரை ஏற்றிச் செல்ல முடியும். அதிகபட்ச பயணத் தொலைவு 900 கிலோமீட்டராகும். இது பாதுகாப்பாகவும் வசதியாகவும் அமைந்த ஹெலிகாப்டராகும்.