உலகப் பொருட்காட்சி சுற்றுலா அலங்கார வண்டியோட்ட நடவடிக்கை இன்று ஷாங்காய் மாநகரில் துவங்கியது. அடுத்த 18 நாட்களில், உலகப் பொருட்காட்சியின் சுற்றுலா நெறிகளின் படங்களை கொண்ட 4 பேருந்துகள் ஷாங்காய், Jiang Su, An Hui, He Nan, பெய்சிங் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில் பயணம் மேற்கொள்ளும். பேருந்துகளில் உள்ள சுற்றுலாத் துறைப் பணியாளர்கள் விளம்பரப் பொருட்களை வினியோகித்து, நகரவாசிகளுக்கு உலகப் பொருட்காட்சி பற்றியும் உலகப் பொருட்காட்சியின் சுற்றுலா திட்டப்பணிகள் பற்றியும் விவரிப்பர்.
சீனத் தேசிய சுற்றுலா ஆணையத் தலைவர் Shao Qi Wei இந்நடவடிக்கையின் துவக்க விழாவில் பேசுகையில், உலகப் பொருட்காட்சி மூலம், சீனாவின் சுற்றுலா மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்த சீனா விரும்புவதாகவும், சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் உலகப் பொருட்காட்சியை கண்டு ரசித்து, சுற்றுலா தகவல்களை அறிந்துக் கொள்ள இந்த நடவடிக்கை உதவும் என்று தெரிவித்தார்.