தற்போது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 90 விழுக்காட்டு பகுதிகளில், வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவை வழங்கப்பட்டது.
இதுவரை, திபெத்தில் 80 விழுக்காட்டுக்கு மேலான கிராமங்களில், எண்ணியல் திரைப்படங்களைப் பார்க்க முடியும். லாசா நகரத்தில் சுமார் 80 ஆயிரம் நகரவாசிக் குடும்பங்களில், எண்ணியல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதியுள்ளது என்று தெரிகிறது.
உள்ளூர் வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாரியங்களின் முயற்சியுடன், திபெத் மொழி நிகழ்ச்சிகளின் பரவலும் செல்வாக்கும் விரிவாகி வருகின்றன. நேபாளத்தில் செயற்கைக் கோள் மூலமான திபெத் மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பரப்புரை பயன் மேலும் வலுப்பட்டு வருகிறது.