திபெத்தில் மிகப் பெரிய சூரிய ஆற்றல மின் நிலையத்தின் கட்டுமானம் 19ம் நாள் Yangbajainவில் துவங்கியது.
திட்டப்படி 10 ஆயிரம் கிலோவாட் சூரிய ஆற்றல் திறன் கொண்ட இம்மின்னாற்றல் திட்டப்பணிக்கென 22 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படும். கட்டுமானக் காலம், 10 திங்கள் நீடிக்கும்.
தவிர, ஒரு புதிய அனல் வெப்ப மின்னாற்றல் திட்டப்பணியும் இன்று Yangbajainவில் துவங்கியது.
அடுத்த சில ஆண்டுகளில், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், அனல் வெப்ப ஆற்றல், உயிரி ஆற்றல் முதலியவை திபெத்தில் வளர்க்கப்படும். திபெத்தில் மேம்பாடுடைய வளங்கள் கூடிய அளவில் வளர்க்கப்பட்டு, பயன்படுத்தப்படும். இதன் மூலம், பாரம்பரிய எரியாற்றல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் சீர்குலைப்பு குறைக்கப்படும்.