• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரிஸில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சுற்றுலா பரப்புரை நடவடிக்கை
  2010-03-19 15:27:08  cri எழுத்தின் அளவு:  A A A   
2010ம் ஆண்டுக்கான பாரிஸ் சர்வதேச சுற்றுலாப் பொருட்காட்சி 18ம் நாள் பாரிஸ் நகரின் Porte de Versailles கண்காட்சி அரங்கில் துவங்கியது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நெருங்கி வருவதுடன், உலகப் பொருட்காட்சி சுற்றுலா, நடப்பு பாரிஸ் சர்வதேச சுற்றுலாப் பொருட்காட்சியில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

4 நாட்கள் நீடிக்கும் இப்பொருட்காட்சியில், பல்வேறு நாடுகளின் 500க்கு அதிகமான சுற்றுலா நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அரங்கில், சிவப்புத் தாளால் தயாரிக்கப்பட்ட சீன பாணி விளக்குகள், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த அரங்கில் வண்ணமிகு படங்கள் காணப்படுகின்றன.

சீன தேசிய சுற்றுலா ஆணையத்தின் பாரிஸ் அலுவலகத்தின் அழைப்பின் பேரில், உலகப் பொருட்காட்சி சுற்றுலா அலுவலுக்குப் பொறுப்பான பத்துக்கு அதிகமான சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேற்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அரங்கில் உலகப் பொருட்காட்சி சுற்றுலா பரப்புரை நடவடிக்கையை நடத்தி, சீனாவில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கின. சீன தேசிய சுற்றுலா ஆணையத்தின் பாரிஸ் அலுவலகத்தின் தலைவர் Xue Gui Feng அம்மையார் கூறியதாவது:

"பாரிஸ் சர்வதேச சுற்றுலாப் பொருட்காட்சியின் வாய்ப்பைப் பயன்படுத்தி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை மேலும் பரப்புரை செய்து, பரவல் செய்கின்றோம். உலகப் பொருட்காட்சி சுற்றுலா திட்டப்பணிகளுக்கு பொறுப்பான 16 சுற்றுலா நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இவ்வாண்டு, சீனாவில் பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ் நாட்டவரது எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். உலகப் பொருட்காட்சியின் வாய்ப்பைப் பயன்படுத்தி, சுற்றுலா சந்தை மீட்சியடையச் செய்யலாம்" என்று அவர் கூறினார்.

7 முறை உலகப் பொருட்காட்சிகளை நடத்தியுள்ள பிரான்சில், மக்கள் உலகப் பொருட்காட்சியுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டுள்ளனர். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அரங்கில், திரு Jean Pierre மற்றும் அவரது மனைவியை செய்தியாளர் சந்தித்தார். Jean Pierre கூறியதாவது:

"ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைக் கண்டு ரசிக்க விரும்புகின்றேன். எந்த நேரத்தில் இப்பொருட்காட்சி்க்கு வருவது மிக நல்லது என்று கேட்டேன். ஜூலை திங்கள் ஷாங்காய்க்கு போக வேண்டாம் என்றும் ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் திங்கள் போகலாம் என்றும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஜூன் திங்களின் இறுதியில் ஷாங்காய்க்கு வந்து, அங்கே 8 அல்லது 9 நாட்கள் தங்கியிருக்க விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார்.

60 வயதான Marie அம்மையாரும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மீது பேரார்வம் கொண்டுள்ளார். முன்பு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியவில்லை என்ற போதிலும், சீன அரங்கில் உலகப் பொருட்காட்சி தொடர்பான சுற்றுலா திட்டப்பணிகளை அறிந்து கொண்ட பின், உலகப் பொருட்காட்சிக்கு வரும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040