நடுவண் அரசின் 5வது திபெத் பணிகள் பற்றிய உரையாடல் கூட்டம் நடைபெற்ற பின், திபெத்தின் பல்வேறு துறையினரும் கூட்டத்தின் எழுச்சியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாண்டின் ஜனவரி 18 முதல் 20ம் நாள் வரை நடுவண் அரசின் 5வது திபெத் பணிக் கூட்டத்தின் கலந்துரையாடல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன தனிச்சிறப்பு மற்றும் திபெத் தனிச்சிறப்புடைய வளர்ச்சிப் பாதையில் திபெத் நடைபோட வேண்டும் என்று இக்கூட்டம் சுட்டிக்காட்டியது.
திபெத்தின் வளர்ச்சி புதிய வரலாற்றின் துவக்கத்தில் உள்ளது என்று சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
கூட்டத்தில் முன்வைத்த வளர்ச்சிப் பாதை, இக்காலத்தில் திபெத்தின் வளர்ச்சிக்கு உகந்தது. திபெத்தின் பல்வேறு இன மக்களின் புதிய எதிர்பார்ப்பின்படியான தெரிவாகும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Padma Tsinle கருத்து தெரிவித்தார்.