28ம் நாள் திபெத் பண்ணை அடிமைகளின் விடுதலை நினைவு நாளாகும். பெய்ஜிங்கில் திபெத் பண்பாட்டு அருங்காட்சியகத்தின் துவக்க விழா நடைபெற்றது. அதில்"திபெத் வரலாற்றுக்கு சாட்சியளித்து திபெத் பண்பாட்டை வெளிக்கொண்ர்வது"எனும் கண்காட்சியும் துவங்கியது.
திபெத் சீனாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி என்பதை இந்தக் கண்காட்சி வெளிப்படுத்துகிறது. திபெத் விடுதலை, ஜனநாயகச் சீர்திருத்தம், வளர்ச்சி சாதனை முதலியவற்றையும் இக்கண்காட்சி காட்டுகிறது.
2007ம் ஆண்டு முதல் சீன திபெத்தியல் ஆய்வு மையம் இவ்வருங்காட்சியகத்தை கட்டியமைக்கத் துவங்கியது. இது திபெத் பிரதேசம் மற்றும் இவ்வினத்தின் பாரம்பரியப் பண்பாட்டை வெளிப்படுத்தும் முக்கிய சாளரமாகும்.