திபெத்தின் பல்வேறு துறையினர் 28ம் நாள் லாசா மக்கள் மண்டபத்தில் கலந்துரையாடல் நடத்தி, பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளைக் கொண்டாடினர். தலாய்லாமா குழு, உண்மையை பொருட்படுத்தாமல் பழைய திபெத்தின் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையைப் பாராட்டி ஆமோதிக்கிறது. இது கவனமான சிநிதனைக்குரிய செயலாகும் என்று திபெத் தன்னாட்சி பிரதேச மக்கள் பேரவைத் துணை தலைவர் Shingtsa Tenzinchodrak தெரிவித்தார்.
ஜனநாயக சீர்திருத்தம் நடைபெறுவதற்கு முந்தைய பழைய கொடிய திபெத் அவரது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. தலாய்லாமா, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையின் பிரதிநிதியாவார் என்று அவர் கூறினார்.