இவ்வாண்டின் மார்ச் 28ம் நாள், திபெத்தின் பண்ணை அடிமை மக்களின் விடுதலை நாள் விழாவின் முதலாவது ஆண்டு நிறைவாகும். இந்த விடுதலை நாளைக் கொண்டாடும் வகையில், தொடர்புடைய கொண்டாட்ட நடவடிக்கை இன்று திபெத்தின் தலைநகர் லாசாவின் போதலா மாளிகைச் சதுக்கத்தில் நடைபெற்றது. 3000க்கு மேற்பட்ட உள்ளூர் மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
திபெத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜனநாயகச் சீர்திருத்தத்தின் மூலம், திபெத்தில் நிலவிய அரசியல் மற்றும் மத ஒன்றிணைப்புடைய நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை முழுமையாக நீக்கப்பட்டது. அதேவேளை, மக்கள் ஜனநாயக அரசியல் அமைப்புமுறை நிறுவப்பட்டது. அதன் விளைவாக, திபெத் மக்கள் சட்டத்தில் விதிக்கப்படும் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.