• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசியப் பொருளாதார மீட்சி
  2010-04-01 15:44:03  cri எழுத்தின் அளவு:  A A A   

போஆவ் ஆசிய மன்றத்தின் 2010ம் ஆண்டுக் கூட்டத்தில் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றும் ஆற்றலை மாற்றுவது பற்றி முதல்முறையாக விவாதிக்கப்படும். அதேவேளையில் ஆசியப் பொருளாதாரத்தின் மாசுபாடற்ற மீட்சியும் விவாதிக்கப்படும் என்று இம்மன்றத்தின் தலைமைச் செயலாளர் லுங் யூன் து கூறினார்.


ஏப்ரல் திங்கள் முதல் நாள் பெய்ஜிங்கில் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் நடப்பு ஆண்டு கூட்டத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகளை அவர் வெளிப்படுத்தினார். வளரும் பொருளாதார நாடு என்ற முறையில் இந்தியா அமைச்சர் நிலை பிரதிநிதிக் குழுவை கூட்டத்துக்கு அனுப்பும். ஆண்டுக் கூட்டம் நடைபெறும் நாட்களில் தைவான் நீரிணை இருகரைகளின் பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். நாடு கடந்த நிறுவனங்களின் சீனப் பிரதேச வட்ட மேசைக் கூட்டம் நடைபெறும். இவை மக்களின் கவனத்தை ஈர்க்கும்.


ஏப்ரல் 9 முதல் 11ம் நாள் வரை சீனாவின் ஹைநான் மாநிலத்தின் போஆவில் நடப்பு ஆண்டுக் கூட்டம் நடைபெறும். ஈராயித்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040