
உலகப் பொருட்காட்சியின் போது ஷாங்காய் மாநகரில் மேலும் 2 சுரங்கு இருப்புப் பாதை நெறிகள் புதிதாக இயங்கும். அப்போது ஷாங்காயில் நாள்தோறும் சுமார் 60 இலட்சம் மக்கள் சுரங்க இருப்புப் பாதை மூலம் பயணம் மேற்கொள்வர் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகப் பொருட்காட்சியின் போது ஷாங்காய் மாநகரில் மொத்தம் 420 கிலோமீட்டர் நீளமான 11 சுரங்க இருப்புப் பாதை நெறிகள் பயணிகளுக்குச் சேவை புரியும் என்று தெரிகிறது. அதற்காக தொடர்புடைய வாரியங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளன.