• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் சுற்றுலா பரப்புரை பேருந்து
  2010-04-13 15:33:09  cri எழுத்தின் அளவு:  A A A   









ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சுற்றுலா பரப்புரைப் பேருந்துகள், 18 நாட்களில், ஷாங்காய் மாநகரத்திலிருந்து, சீனாவின் 8 மாநிலங்கள் அல்லது நகரங்களில் பயணம் மேற்கொண்ட பின், பெய்ஜிங்கை வந்தடைந்தது. இந்த பரப்புரைப் பயணத்தின் மொத்த நீளம் 5500 கிலோமீட்டராகும். உலகப் பொருட்காட்சியின் பரப்புரைத் தகவல்களுடன், ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பணியகத்தின் சுற்றுலாப் பணியாளர்கள் 4 சுற்றுலா பரப்புரைப் பேருந்துகளில், நாடளவில், உலகப் பொருட்காட்சியைப் பரப்புரை செய்து, மேலதிக சீன மக்களுக்கு இப்பொருட்காட்சியை மேலதிகம் அறியச் செய்தனர். இன்றைய நிகழ்ச்சியில், சுற்றுலா பரப்புரைப் பேருந்துகளுடன் இணைந்து, உலகப் பொருட்காட்சியை ஆழமாகப் புரிந்துகொள்வோம்.


ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டின் மே திங்கள் முதல் நாள் துவக்கம், அக்டோபர் திங்கள் 31ம் நாள் வரை, ஷாங்காய் மாநகரில் நடைபெறும். மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்பது 184 நாட்களில் நடைபெறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பாகும். Haibao என்ற விளையாட்டுப் பொம்மை, இப்பொருட்காட்சியின் சின்னமாகும் என்று anhui மாநிலத்தின் baijinwan துவக்கப் பள்ளியின் மாணவர் ஒருவர் guankeqi தெரிவித்தார். உலகப் பொருட்காட்சி பற்றிய தகவல்களை, பொது மக்களுக்கு காட்டி அவர் பரப்புரை செய்தார்.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, 2010ம் ஆண்டு, ஷாங்காய் மாநகரம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்ற பாடல். சீனாவின் jiangsu மாநிலத்தின் nanjing நகரத்திலிருந்து, பேருந்தில் 2 மணிநேரத்திற்குள், ஷாங்காய் மாநகரைச் சென்றடையலாம். அங்குள்ள மக்கள் பலர், ஷாங்காய் மாநகரத்துக்குச் சென்று, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை நேரில் பார்க்க விரும்புகிறனர். 70 வயதான wangkezhiஉம், அவரது மனைவியும், இப்பொருட்காட்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியுடன் தொடர்புடைய தகவல்களை அவர்கள் ஆவலுடன் திரட்டி வருகின்றனர்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் நாங்கள் தொடர்ந்து மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றோம். இப்பொருட்காட்சியின் எல்லா அரங்குகளும் வெகுவிரைவில் முழுமையாக கட்டியமைக்கப்படும். இணைய தளத்தின் மூலம், இந்த அரங்குகளின் பல்வேறு சிறப்புகளை அறிந்து மகிழ்கின்றோம் என்று அவர் கூறினார்.
சுற்றுலா பரப்புரைப் பேருந்துகள், சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, பொருட்காட்சியுடன் தொடர்புடைய 16 பரப்புரை நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்நடவடிக்கைகளின் மூலம், ஷாங்காய் பொருட்காட்சியின் தகவல்களை பொது மக்கள் சீராக புரிந்துகொள்ளலாம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய பொது அறிவுப் போட்டியை மக்கள் உற்சாகத்துடன் நடத்துகின்றனர். இதன் மூலம், மக்கள் அனைவரும் இப்பொருட்காட்சியைப் எளிதாக புரிந்துகொள்ள முடியும் என்று ஹெய்நான் மாநிலத்தின் xinyuan குடியிருப்பின் lihaitang ஆசிரியர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

உலகப் பொருட்காட்சி, சீனாவில் நடைபெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளிநாடுகளுக்குச் செல்லாமலே, உலகளவில் சுற்றுலா பயணம் மேற்கொள்வது போல், சீன மக்கள் இப்பொருட்காட்சியை அனுபவிக்கலாம். பிற நாடுகளின் மக்களது நடையுடை பாவனைகளையும், பண்பாடுகளையும் நேரில் கண்டு ரசிக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.
Yujia, பெய்ஜிங் மாநகரின் kanghui சுற்றுப் பயண நிறுவனத்தின் பணியாளராவார். சுற்றுலா பரப்புரைப் பேருந்துகள் பயணம் மேற்கொண்ட போது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சுற்றுலா நெறிகளையும் தகவல்களையும் அவர் பொறுமையாக எடுத்துக்கூறினார். நாள்தோறும், அவர் நாள் குறிப்பை எழுதி வருகின்றார். சீன மக்களின், உலகப் பொருட்காட்சி மீதான உற்சாகம் அவரது நாள் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கூறியதாவது


சுற்றுலா பரப்புரைப் பேருந்துகள், 5 மாநிலங்களிலும் 3 மாநகரங்களிலும், ஈர்ப்பு ஆற்றல் மிகுந்த நடவடிக்கைகளை நடத்தின. பல்வேறு பிரதேசங்களின் மக்கள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மீது, மாபெரும் உற்சாகத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகப் பொருட்காட்சி, ஷாங்காய் மாநகரில் நடைபெறுவது, எனக்கு பெருமை. இப்பொருட்காட்சி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் நான் விரும்புகின்றேன் என்று yujia குறிப்பிட்டார்.
தவிர, சீனாவின் இதர 100 நகரங்களில், பரப்புரை நடவடிக்கைகளை சீனத் தேசிய சுற்றுலாப் பணியகம் சிறப்பாக மேற்கொள்ளும். 100 நகரங்களிலான பரப்புரை நடவடிக்கைகளின் மூலம், எழில் மிக்க உலகப் பொருட்காட்சியை பற்றி, சீன மக்கள் மேலதிகம் அறிந்து கொள்ளலாம். பேருந்துகளில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய பரப்புரைப் பணியை முடித்துக்கொண்டவர்களில் பலர்,
சொந்த பணியில் மீண்டும் ஈடுபட வேண்டும். அவர்கள் சொந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டே, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும் என்று சுற்றுலா பரப்புரைப் பேருந்துகளின் ஓட்டுநர்களில் ஒருவரான chenrujun தெரிவித்தார். அவர் கூறியதாவது

இப்பேருந்துப் பயணத்தின் மூலம், ஷாங்காய் மாநகரிலிருந்து புறப்பட்டு, jiangsu,anhui,shandong,henan,hebei,தியன் ஜின் ஆகியவற்றுக்குப் பின், பெய்ஜிங்கை வந்தடைந்தேன். இப்பொருட்காட்சியின் மீதான கவனமும் உற்சாகமும் சீன மக்களிடம் மிகுதியாகவுள்ளது. நான், ஷாங்காய் மாநகரைச் சேர்ந்தவன். சொந்த முயற்சியுடன், உலகப் பொருட்காட்சிக்கு மேலும் பங்காற்றுவது எனது கடமையாகும்
என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040