• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
  2010-04-15 09:47:34  cri எழுத்தின் அளவு:  A A A   









San Lin Shi Bo Jia Yuan என்னும் குடியிருப்பு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்கா அமைந்துள்ள இடத்தில் முன்பு இருந்த மக்களுக்கென சீன அரசு சிறப்பாக கட்டியமைத்த குடியிருப்பாகும். இது, ஷாங்காய் மாநகரின் வரலாற்றில் அளவில் மிகப் பெரிய இடப்பெயர்வுத் தளமாகவும் இருக்கிறது. Jiang Ju Fang என்னும் பெண், இடம்பெயர்ந்த மிகப் பல மக்களில் ஒருவர் ஆவார்.
Jiang Ju Fangகின் பழைய வீடு, Bai Lian Jing பிரதேசத்தில் அமைந்தது. Bai Lian Jing, 17வது நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகி, பிற பகுதிகளின் குடியேறிகள் குழுமி வாழ்ந்த இடமாக இருந்தது. 1930ஆம் ஆண்டுகள் முதல், இப்பகுதி குடிசைக் குடியிருப்பாக மாறியது. அப்போது இடிந்த வீடுகளும், பழைய வீடுகளும் அங்கே இருந்தன. வீடுகளில் தனிபட்ட கழிவறைகளும் சமையலறைகளும் இல்லை. சாலைகள் குறுகியதாய், புழுதியுடன் இருந்தன. தமது குடும்பத்தில் 5 பேர் சில பத்து சதுர மீட்டர் அளவுடைய வீட்டில் தங்கியிருந்தனர் என்று Jiang Ju Fang நினைவுகூர்ந்தார்.

2002ஆம் ஆண்டு உலகப் பொருட்காட்சியை நடத்தும் உரிமையை ஷாங்காய் மாநகரம் வெற்றிகரமாக பெற்றது. உலகப் பொருட்காட்சி பூங்காவைக் கட்டியமைக்க, Bai Lian Jing உள்ளிட்ட ஷாங்காய் Pu Dong பிரதேசத்தில் உள்ள பழைய குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். இடிந்த பழைய வீடுகளில் தங்கியிருந்த மக்கள் புதிய குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்து, வசதியான இன்பமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். Jiang Ju Fangகின் பழைய வீட்டின் பரப்பளவை விட, புதிய வீட்டின் பரப்பளவு மிக அதிகம். குடியிருப்பில் வில்லோ மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. முன்பை விட போக்குவரத்தும் வசதியாக இருக்கிறது.
Jiang Ju Fangகின் வீட்டில், சீன பாணி அலங்காரம் காணப்படுகிறது. PADAUK மரத்தால் தயாரிக்கப்பட்ட வீட்டு சாமான்கள், புதிய வீட்டுக்கு எழில் ஊட்டுவதாக அமைக்கின்றன. Jiang Ju Fang அம்மையாரும், அவரது கணவரும் புதிய வீட்டில் நூல்கள் படித்து, படங்கள் வரைந்து, இன்பமாக வாழ்க்கை நடத்துகின்றனர்.

இவ்வாண்டு சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடரில், தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் வழங்கிய அரசுப் பணியறிக்கையில் மக்களுக்கு மேலும் அருமையான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது:

"மக்கள் மேலும் இன்பமாகவும், மதிப்புடனும் வாழ்ந்து, சமூகம் மேலும் நியாயமாகவும், இணக்கமாகவும் இருக்க, இயன்றதனைத்தையும் செய்வோம்" என்று வென்ச்சியாபாவ் கூறினார்.
செய்தி ஊடகங்களின் மூலம், தலைமையமைச்சர் வழங்கிய அரசுப் பணியறிக்கை சீனாவின் பல்வேறு இடங்களுக்கு பரவியுள்ளது. ஷாங்காய் மாநகரின் San Lin Shi Bo Jia Yuan குடியிருப்பிலும் இந்தச் செய்தி பரவி வந்துள்ளது. Jiang Ju Fang அம்மையாரின் கணவர் திரு Jiang கூறியதாவது:
"எங்கள் வாழ்க்கை நாளுக்கு நாள் இன்பமாக மாறியுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் பொது மக்கள் மீது அக்கறை செலுத்தியுள்ளன. முதியோரான நாங்கள் இளமையாக மாறியுள்ளோம்" என்று அவர் கூறினார்.
"மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை" என்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பும், தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் வழங்கிய அரசுப் பணியறிக்கையின் அம்சங்களும் ஒத்த கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத் தலைவருமான Hong Hao, உலகப் பொருட்காட்சிப் பூங்கா கட்டியமைக்கப்பட்ட பிரதேசத்தின் மக்கள் மற்ற இடத்தில் குடியமரும் நிலைமை பற்றி எடுத்துக்கூறினார். திட்டத்தின் படி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் நிலப்பரப்பு, 5.28 சதுர கிலோமீட்டர் ஆகும். முன்பு 18 ஆயிரம் குடும்பங்களும், சுமார் 270 தொழில் நிறுவனங்களும் அங்கே இருந்தன. சில பெரிய ரகத் தொழிற்சாலைகள் அங்கே இருந்ததால், இப்பிரதேசம் ஷாங்காய் மாநகரின் மையப்பகுதியில் காற்று மாசுபடுவதற்கான ஊற்றுமூலமாக இருந்தது என்று Hong Hao கூறினார். அவர் கூறியதாவது:

"இந்த 18 ஆயிரம் குடும்பங்கள் மேலும் நல்ல இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்பது எங்களது விருப்பமாக இருந்தது. இப்போது அந்த விருப்பம் நனவாகியுள்ளது. இந்த 18 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடியிருப்புகளில் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளன. புதிய குடியிருப்புகள் பூங்காவை போல் மிகவும் அழகாக இருக்கின்றன. குடியிருப்புகளின் நிலப்பரப்பு, முன்பை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது" என்றார் Hong Hao.

50க்கு அதிகமான நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார். வெளிநாட்டுச் செய்தியாளர்கள் மகிழ்ச்சியில் எழுப்பினர்.
San Lin Shi Bo Jia Yuan குடியிருப்பில், உயிரின வாழ்க்கைச் சூழல் சிறந்து விளங்குகிறது. இது மட்டுமல்ல, இங்கே இசைவான வாழ்க்கை வசதிகள் முழுமையானவை. எடுத்துக்காட்டாக, குடியிருப்பு மருத்துவ மனை மற்றும் பொழுது போக்கு மையத்தை குறிப்பிடலாம். எதிர்காலத்தில் இங்கே சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்தும் திறக்கப்படும்.
இவ்வாண்டு தேசிய மக்கள் பேரவை மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்களில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் கவனம் செலுத்தும் பிரச்சினைகளில் ஒன்றாகும். உலகப் பொருட்காட்சி மூலம், பொது மக்கள் மேலும் இன்பமான வாழ்க்கை நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்தனர். இணையம் மூலம் இணையப் பயன்பாட்டாளர்களுடன் உலகப் பொருட்காட்சி பற்றி விவாதிக்குமாறு தேசிய மக்கள் பேரவையின் 6 பிரதிநிதிகளுக்கு ஷாங்காய் பிரதிநிதிக்குழு அழைப்பு விடுத்தது. இக்குழுத் தலைவர் Liu Yun Geng கூறியதாவது:
"ஷாங்காய் மாநகரவாசிகள் நவீன அறிவியல் பயன்களை அனுபவித்து, மேலும் இன்பமாக வாழ முடியும் என்பது உலகப் பொருட்காட்சியை நடத்துவதன் நோக்கம். எடுத்துக்காட்டாக, சில போக்குவரத்துப் பிரச்சினையில் பொது மக்களுக்கு மேலும் செவ்வனே சேவை புரிய வேண்டும்" என்று அவர் கூறினார்.
Jiang Ju Fang மற்றும் அவரது அண்டைவீட்டுக்காரர்கள், குடியிருப்பில் உலகப் பொருட்காட்சி தொடர்பான நடவடிக்கைகளை அடிக்கடி நடத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, குடியிருப்பு கலை அரங்கேற்றம், உலகப் பொருட்காட்சி தொடர்பான ஆங்கில மொழி படிப்பு போன்றவை. தற்போது உலகப் பொருட்காட்சியின் தொண்டர் அணியில் சேர்ந்து, உலகப் பொருட்காட்சி துவங்குவதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Gu Mei Qing, Jiang Ju Fang அம்மையாரின் அண்டைவீட்டுக்காரர் ஆவார். இக்குடியிருப்பில் அவர் புகழ் பெற்றவர். கடந்த 7 ஆண்டுகளில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் குடியிருப்புப் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் கூறியதாவது:
"ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மீது பெரும் எதிர்ப்பார்ப்பு கொண்டுள்ளோம். பயணிகளின் உள்ளத்தில் நல்ல மனப்பதிவு ஏற்படுவது எங்கள் விருப்பம். அன்பான ஷாங்காய் மாநகரவாசியாக செயல்பட வேண்டும். ஷாங்காய்க்கு நல்வரவு" என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040