
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சோதனை முறையில் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன், அதாவது ஏப்ரல் 19ஆம் நாள், அதற்கான தகவல் அளிக்கும் தொலைபேசி சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அதற்குரிய எண் 962010 ஆகும். சீன மொழி தவிர, ஆங்கில, பிரெஞ்சு, ஜப்பானிய, கொரிய, அரேபிய, ஸ்பானிய, ரஷிய, இத்தாலிய, மலாய், இந்தோனேசிய, தாய் மற்றும் ஜெர்மானிய மொழிகளில், இத்தொலைபேசி சேவை வழங்கப்படும். ஏறக்குறைய முழு உலகிலும் கிடைக்கும் இந்த சேவையின் வெளிநாட்டு ஆலோசனைத் தொலைபேசி, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஓஷியானியா ஆகிய 5 கண்டங்களைச் சேர்ந்த 33 நாடுகளில் பரவியுள்ளது.