
இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது ஷாங்காய் மாநகர வாசி திரு ச்சான் அவரது குடும்பத்தினருடன் காலை 6 மணியளவில் உலகப் பொருட்காட்சியை பார்வையிட வீட்டிலிருந்து புறப்பட்டார். இப்பயணம் பற்றி மகிழ்ச்சிகரமான மனத்துடன் அவர் கூறியதாவது. பூங்காவில் அரங்குகள் மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றன. உள்மங்கோலிய அரங்கு, சுங்சிங் தேநீர் அரங்கேற்ற நிகழ்ச்சி முதலியவை எங்களுக்கு புதிய உணர்வை தந்துள்ளன. காட்சியகங்களில் கணினிச் சாதனங்கள் மேலும் புதுப்பிக்கப்பட வேண்டும். இணக்கமான வெற்றிகரமான உலகப் பொருட்காட்சியாக ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடத்தப்பட வாழ்த்துவதாக திரு ச்சான் கூறினார்.
சோதனைமுறையில் இயங்குகின்ற ஜெர்மனி அரங்கு பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அரங்கின் செய்தித் தொடர்பாளர் Marion Conrady அம்மையார் சோதனை இயக்கத்தின் நிலைமை பற்றி கூறியதாவது. பயணிகளின் நுழைவுக்கு வசதி தரும் வகையில் மேலும் கூடுதலான நுழைவு வாயில்களை நிறுவுவது மிகவும் அவசியமானவை. இதைச் செயல்படுத்துவது கடினம் இல்லை. உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் மேற்கொள்ளப்படும் பல்வகை ஏற்பாடுகளின் படி இவற்றைச் செயல்படுத்த வேண்டும். ஜெர்மனியின் அரங்கில் "ஆற்றல் தோற்ற வளம்"எனும் அரங்கேற்றம் ஒரு முறை 600 பார்வையாளர்களை மட்டும் வரவேற்க முடியும். நாள்தோறும் 45 ஆயிரம் பயணிகளை நாங்கள் உபசரிக்க முடியும். அரங்கில் பணிபுரிவோர் அனைவரும் சீன மொழி மற்றும் ஜெர்மன் மொழியில் பயணிகளுடன் பேசிப் பழகும் திறமை கொண்டுள்ளனர். இவர்களில் சீனர்களும் உள்ளனர். தாய் மொழி தவிர ஜெர்மன் பணியாளர்கள் ஆங்கிலத்திலும் பேசுகின்றனர் என்று Marion Conrady அம்மையார் கூறினார்.
இந்த சோதனை திறப்பு நடவடிக்கையில் பூங்காவில் சேவைபுரிவோரில் பத்தாயிரம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பார்வையாளர்களுக்கு உதவி வழங்கும் அதேவேளையில் உலகப் பொருட்காட்சிச் சேவைப் பணியை அவர்கள் தொடர்ந்து அறிந்து கொள்வர். மே திங்கள் முதல் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அதிகாரப்பூர்வமாக துவங்குவதற்கு முன் இத்தகைய சோதனை நடவடிக்கை 5 முறை நடைபெறும். சோதனையில் கண்டறியப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தாமதமின்றி தீர்க்கப்படுவது திண்ணம்.