
கடந்த 8 ஆண்டுகால தலைசிறந்த ஆயத்தப் பணிகள் முடிந்த பின், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவும், ஒரு பகுதி அரங்குகளும் 20ம் நாள் முதல், சோதனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு அரங்கிலும் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையான பயணிகள் சோதனைப் பயணம் மேற்கொள்கின்றனர். உலகப் பொருட்காட்சி பூங்காவைக் கட்டியமைத்தோர், காட்சி சாதனங்களைப் பொருத்தியோர், ஷாங்காய் மற்றும் அதன் சுற்றுப்புற பிரதேசங்களின் பிரநிதிகள் ஆகியோர், இப்பயணிகளில் இடம்பெறுகின்றனர்.
2002ஆம் ஆண்டு உலகப் பொருட்காட்சியை நடத்துவது கோரி செய்தது வெற்றி பெற்றது. இன்று உலகப் பொருட்காட்சி பூங்கா சோதனை முறையில் இயங்க துவங்கியது. இன்று சீனா, ஜெர்மனி, தாய்லாந்து அரங்குகளின் வெளியே, ஒழுங்கினை நிலைநிறுத்தும் தொண்டர்களின் உதவியுடன் பயணிகள் வரிசையில் காத்திருந்தனர்.
1 2