• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய்க்கு வருவதற்கு சீனாவின் வரவேற்பு
  2010-04-27 17:01:24  cri எழுத்தின் அளவு:  A A A   
பல்வேறு நாடுகளின் தலைவர்களும் மக்களும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிட்டு தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்து கொள்வதை சீனா வரவேற்கிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ அம்மையார் 27ம் நாள் பெய்சிங்கில் இதைத் தெரிவித்தார்.
இதுவரை பிரான்ஸ் அரசுத் தலைவர் நிகோலஸ் சர்கோஸி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஹோஸே மனுவேல் பரோசோ உள்ளிட்ட சில பத்து நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். துவக்க விழாவுக்குப் பிந்தைய 184 நாட்களில் பல்வேறு நாடுகளின் நிகழ்ச்சிகள் நடைபெறும். பல்வேறு நாடுகளின் தலைவர்களும் மக்களும் இப்பொருட்காட்சிக்கு வருகை தந்து நடவடிக்கைகளில் கலந்து கொள்வதை சீனா வரவேற்பதாக ஜியாங்யூ அம்மையார் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040