• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவில் பிரான்ஸின் ரோன் ஆல்ப்ஸ் பிரதேச அரங்கு
  2010-04-30 10:26:47  cri எழுத்தின் அளவு:  A A A   










சில நாடுகளை அல்லது பிரதேசங்களைப் பொறுத்த வரை ஷாங்காய் மாநகருக்கு வந்து உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வது, சீனாவில் தனது தோற்றத்தை முதன் முறையாக முழுமையாக வெளிப்படுத்தும் முயற்சியாகும். ஆனால், இந்தப் பொருட்காட்சியின் சிறப்பு மாதிரிகளில் ஒன்றான பிரான்ஸின் ரோன் ஆல்ப்ஸ் பிரதேசத்தைப் பொறுத்த வரை, பழைய நண்பர் என்ற முறையில் மேற்கொண்ட மற்றொரு பயணம் எனலாம்.

ரோன் ஆல்ப்ஸ் பிரதேசம் பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாரிஸ் மாநகரை அடுத்து பிரான்ஸ் நாட்டின் 2வது உயர் வளர்ச்சி அடைந்த பிரதேசம் இதுவாகும். 1987ம் ஆண்டு இதுவும் ஷாங்காய் மாநகரும் நட்புறவை உருவாக்கின. சீனாவுடனான அதன் உறவு 19வது நூற்றாண்டின் 20ம் ஆண்டுகளில் துவங்கியது என்று ரோன் ஆல்ப்ஸ் பிரதேசத்தின் தலைவர் ஜான் ஜாக் கீரேன் தெரிவித்தார். அவர் கூறியதாவது
ரோன் ஆல்ப்ஸ் பிரதேசமூம் ஷாங்காய் மாநகரமும் 1987ம் ஆண்டில் நட்புறவை உருவாக்கின. இரு தரப்புறவு 24 ஆண்டுகள் வரலாறுடையது. 1921 முதல் 1946ம் ஆண்டு வரை, சீனாவின் பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் ரோன் ஆல்ப்ஸ் பிரதேசத்தின் தலைநகர் லியோனில் அமைந்துள்ள சீன-பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றனர். அவர்களில் அதிகமானோர் சீன வரலாற்றில் மிக முக்கிய பிரமுகர்களாகிவிட்டனர். அவர்களில் சோ என்லாய், தங் சியாவ் பிங், சென் யீ முதலியோர் இடம்பெற்றனர். ஆகையால், ரோன் ஆல்ப்ஸ்-ஷாங்காய் உறவு 24 ஆண்டுகள் மட்டுமல்ல அதை விட நீண்ட வரலாறுடையது என்று அவர் கூறினார்.


இத்தகைய வரலாற்றின் அடிப்படையில், இரு தரப்புறவு மேலும் தொடர வேண்டும் என்று கீரேன் விருப்பம் தெரிவித்தார். நடப்பு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வது, அதற்கான அரிய வாய்ப்பாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைசிறந்த மாதிரி அரங்குகளில் ஒன்றான ரோன் ஆல்ப்ஸ் அரங்கு, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் ஒரு கட்டிடமாகும். காற்றுத் தரக் கட்டுப்பாடு, விளக்கு, தட்பவெப்ப நிலை கட்டுப்பாடு, ஒலி தடுப்பு, கழிவுப் பொருட்களின் மறு பயன்பாடு முதலிய துறைகளின் மேன்மையுடன் இந்தக் கட்டிடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. அதன் எரியாற்றல் செலவு அதே மாதிரியிலான வேறு கட்டிடத்தில் இருப்பதில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே. தவிர, அரங்கின் விளக்கு ஒளி வடிவமைப்பு தனிச்சிறப்புடையது. இரவில் இது ஒளி நகரமாக மாறும். கட்டிடத்தின் வெளிப்புறத்தில் விலங்குகள், தாவரங்கள் முதலியவற்றின் நிழற்படங்கள் காணப்படலாம். எடுத்துக்காட்டாக, பூச்சிகள் பச்சை நிற இலைகளின் மேல் நடக்கும் சுவையான காட்சியை பார்வையாளர்கள் கண்டுரசிக்கலாம். ஒளி நகரத்தை வடிவமைக்கும் கருத்து, லியோன் நகரின் ஒளி விழாவிலிருந்து கிடைத்தது என்று கீரேன் கூறினார். அவர் கூறியதாவது
லியோன் நகரில் ஒரு பாரம்பரிய விழா உண்டு. ஒவ்வொரு ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 8ம் நாள் மக்கள் ஒளி விழாவைக் கொண்டாடுகின்றனர். முன்பு இது ஒரு மத விழாவாகும். படிப்படியாக இது பரவலடைந்தது. லி யோன் நகரம் ஒளி விழா மூலம் மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்தி, மேலும் அதிக மக்கள் தன்னை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றது என்று கீரேன் கூறினார்.


ரோன் ஆல்ப்ஸ் அரங்கின் மேல்பகுதியில் PAUL BOCUSE சமையல் பள்ளியும் உணவகமும் உள்ளன. உலகப் பொருட்காட்சி நடைபெறும் 6 திங்கள் காலத்தில், அந்த சமையல் பள்ளி சுமார் 120 சீன இளைஞர்களுக்கு ரோன் ஆல்ப்ஸ் பிரதேசத்தின் பாரம்பரிய சமையல் கலையை கற்பிக்கவுள்ளது. ஷாங்காய் சுற்றுலா கழகத்தைச் சேர்ந்த சீன மாணவர்களும் அவர்களது பிரான்ஸ் சக மாணவர்களும் உணவகத்தில் பார்வையாளர்களுக்கு உணவு சேவையை வழங்குவர். சீனாவும் பிரான்ஸும் ஒன்றின் பண்பாட்டில் மற்றது ஈர்க்கப்படுகின்ற சிறப்புடையவை. உணவு வகை அவற்றில் ஒரு பகுதி என்று PAUL BOCUSE சமையல் பள்ளியின் தலைவர் HERVY FLEURY கூறினார்.
PAUL BOCUSE உணவகத்தில் சீனப்பாணி பொருட்களை சேர்க்க விரும்புகின்றோம். இரு நாட்டு பண்பாடுகளை உரிய முறையில் சேர்க்க முயல்கின்றோம். இந்த உணவகம் இரு நாட்டு மாணவர்களின் ஒத்துழைப்பை காட்டுகின்றது. விருந்தினர்களுக்கு இது மகிழ்ச்சியை தரும். பிரான்ஸின் கண்காட்சியும் உணவு வகையும் மக்களின் மனதில் அழகான பதிவாகிவிடும் என்று அவர் கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மூலம், பிரான்ஸ் பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் அதேவேளையில், மேலும் அதிகமான புதிய நண்பர்களையும் அறிந்து பழகிக்கொள்ள வேண்டும் என்று ரோன் ஆல்ப்ஸ் பிரதேசத்தின் தலைவர் கீரேன் கூறினார். அவர் கூறியதாவது


ரோன் ஆல்ப்ஸ் பிரதேசம் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சில வாரங்கள் கண்காட்சியை அளிக்கும். அதன் மூலம், எமது கூட்டு நிறுவனங்களும் சீனாவின் கூட்டு நிறுவனங்களும் பரிமாற்றம் செய்ய வேண்டுமென விரும்புகின்றோம். தவிர, சீனக் கூட்டு நிறுவனங்கள் ரோன் ஆல்ப்ஸ் பிரதேசத்தில் வணிக சோதனை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றோம். இத்தகைய தொடர்பு மூலம், சீனக் கூட்டு நிறுவனங்கள் எமது முதலீட்டுச் சூழ்நிலையை மேலும் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
ரோன் ஆல்ப்ஸ் பிரதேச அரங்கு நடப்பு உலகப் பொருட்காட்சிக்குப் பின், நிலைநிறுத்தப்பட்டு ஷாங்காய் மாநகரிலுள்ள ரோன் ஆல்ப்ஸ் பிரதேசத்தின் பணி அலுவலமாக மாறும். கீரேன் கூறியதாவது


இந்த அரங்கு 6 திங்கள் மட்டுமல்ல மேலும் நீண்ட காலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆகையால், ஷாங்காய் தரப்புடன் இது பற்றி விவாதித்து, உடன்படிக்கையை உருவாக்கினோம். இந்த அரங்கு 20 ஆண்டுகள் ஷாங்காயில் நிலைநிறுத்தப்படும். ஷாங்காயிலுல்ள எமது பிரதேசத்தின் பணியாளர்கள் இந்த அரங்கில் பணி புரிவர். மட்டுமல்ல, சீனாவுடன் வணிகத் தொடர்பு கொண்ட கூட்டு நிறுவனங்களும் இதில் பணி புரியலாம் என்று அவர் கூறினார்.
மே திங்கள் அதிக வகை பூக்கள் காணப்படும் காலமாகும். ரோன் ஆல்ப்ஸ் பிரதேசத்தின் அரங்கில் ஒரு சிறப்பான ரோஜா தோட்டம் உள்ளது. சீனா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் ரோஜா பூ மூலம் பிரான்ஸின் அற்புதத்தை உணரலாம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040