• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சோதனை முறையில் இயங்கியது
  2010-04-28 18:50:32  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏப்ரல் 30ம் நாளிரவு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா நிகழ்ச்சி ஹுவாங்பூஃ ஆற்றின் பக்கத்தில் நடைபெறவுள்ளது. ஷாங்காய் மாநகரம், இதற்காக அனைத்து ஏற்பாட்டுப்பணிகளை நிறைவேற்றியுள்ளது.

 

ஏப்ரல் 20ம் நாள் முதல் இதுவரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 6 சோதனை முறையில் இயங்கியது. இலட்சக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். இவ்வாறு சோதனை முறையில் இயங்கியதன் மூலம், ஏற்பாட்டுக்க்குழு படிப்படியாக பணி அனுப்பவங்களைச் சேகரித்து, குறைப்பாடுகளை மேம்படுத்தி, வசதிகளைப் பரிசோதனை செய்து, சேவைகளை முழுமைப்படுத்தும் இலக்கு நிறைவேறியுள்ளது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி செயற்குழுவின் நிரந்தர துணைத் தலைவரும், ஷாங்காய் மாநகரத்தின் துணைத் தலைவருமான யாங் சியுங் 28ம் நாள் ஷாங்காயில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இதை தெரிவித்தார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அரங்குகளின் மொத்த பரப்பும், இதில் கலந்து கொள்ளும் தரப்புகளின் எண்ணிக்கையும் வரலாற்றில் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகப் பொருளாதார ஆணையத்தின் தலைமைச் செயலாளர் லாஸ்சேர்தாலஸ் இது குறித்து மேலும் கூறியதாவது

அனைத்து பொருட்காட்சி அரங்குகளும் உயர் தரமுடையதாக கட்டப்பட்டுள்ளன. சோதனை முறையில் இயங்கியபோது, பல்வேறு நாடுகளின் அரங்குகள், மிகவும் தலைசிறந்ததாகவும் மிகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தன. சீனத் தேசிய அரங்குகளில் ஒரு பகுதியான பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்கள் அரங்குகளின் ஆயத்தப் பணிகளில், அதிக கவனம் செலுத்தப்பட்டது. அவை சோதனை முறையில் இயங்கியபோது, சுமார் 3லட்சம் பார்வையாளர்கள் அவற்றை பார்வையிட்டுள்ளனர்.

உலகப் பொருட்காட்சியின்போது, இம்மாநில மற்றும் நகர அரங்குகளின் செயல்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொள்வதாக, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினர் வாங்சின்சென் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பல்வேறு இடங்களின் தனிச்சிறப்பு வாய்ந்த அரங்குகள், சீனப் பண்பாடு, நாகரிகம், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி ஆகியவற்றின் சாதனைகளை பன்முகங்களிலும் வெளிப்படுத்துகின்றன. சில மாநிலங்கள், இயந்திர மனிதரின் கண்காட்சி, இசை அரங்கேற்றம், நடனம் முதலியவற்றையும் நடத்தும். இவை, உலகப் பொருட்காட்சியின் மகிழ்ச்சியான சூழ்நிலையை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா ஏப்ரல் 30ம் நாள் இரவு நடைபெறும். 7 கோடி பேர் இப்பொருட்காட்சியைப் பார்வையிடுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040