• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
Zaragoza உலகப் பொருட்காட்சி
  2010-04-28 13:18:16  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்பெயின் நாட்டின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமைவாய்ந்த நகரம் Zaragoza. 2008ஆம் ஆண்டு "நீர் மற்றும் தொடரவல்ல வளர்ச்சி" என்ற தலைப்பிலான சிறப்புத் துறை உலகப் பொருட்காட்சி இந்நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, Zaragozaவின் நகரத் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது. பண்டைக்கால நாகரிகமும், நவீன வளர்ச்சியும் சீராக இணைக்கப்படும் எழில் மிக்க நகரம் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

3 திங்கள் காலம் நீடித்த இப்பொருட்காட்சியில், 104 நாடுகள் மற்றும் 3 சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்டன. 60 லட்சம் பயணிகள் இப்பொருட்காட்சியை பார்வையிட வந்தனர். பொருட்காட்சியின் போது, சுமார் ஆயிரம் சிறந்த அரங்கேற்றங்கள் நடைபெற்றன. இப்பொருட்காட்சியின் ஆயத்தப் பணிகளில் பங்கெடுத்த Pilar Barbed அம்மையார் கூறியதாவது:

"இந்த உலகப் பொருட்காட்சி என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த மக்களைச் சந்தித்ததால், எமது கண்கள் அகலத் திறந்துள்ளன. Zaragozaஐப் பொறுத்த வரை, இந்தப் பொருட்காட்சி மிகவும் முக்கியமானது. இந்நகரின் போக்குவரத்து நிலைமை நன்றாக மேம்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Zaragoza உலகப் பொருட்காட்சி முடிவடைந்த பின், Expo Zaragoza Empresarial கூட்டு நிறுவனம் நிறுவப்பட்டது. Zaragoza உலகப் பொருட்காட்சியின் அரங்குகளை நிர்வகிப்பதற்கு இந்நிறுவனம் பொறுப்பேற்கின்றது. இந்நிறுவனத்தின் முதன்மை செய்தி அலுவலர் Ricardo Martin கூறியதாவது:

"3 திங்கள் மட்டுமே நீடிக்கும் நடவடிக்கையாக அல்லாமல், உலகப் பொருட்காட்சி தொடரவல்ல திட்டப்பணியாகவுள்ளது. உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணியில், உலகப் பொருட்காட்சி முடிவுக்கு வந்த பின், உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் பயன்பாட்டுப் பிரச்சினை முழுமையாக கருத்தில் கொள்ளப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

 

பண்பாடு மற்றும் மத விவகாரத்துக்குப் பொறுப்பான Zaragoza மாநகராட்சித் துணைத் தலைவர் Geronino Blasco கூறியதாவது:

"Zaragozaஐப் பொறுத்த வரை, பொருளாதாரப் பயன், மிக முக்கிய பயனாகும். கடந்த மூன்று ஆண்டுகளில், பொருட்காட்சியை ஆயத்தம் செய்த போதும், பொருட்காட்சி நடைபெற்ற போதும், ஸ்பெயின் நாட்டில், பொருளாதாரம் மிக விரைவாக வளர்ந்த பிரதேசங்களில் Zaragozaவும் ஒன்றாகும். தவிர, உலகப் பொருட்காட்சியின் மூலம், தங்களுக்கு அருமையான எதிர்காலம் உண்டு என்று இந்நகரவாசிகள் புரிந்து கொண்டுள்ளனர்" என்றார், அவர்.

Zaragoza உலகப் பொருட்காட்சியிலிருந்து வேறுபட்டது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி. அது உலகத்தன்மை வாய்ந்த பன்னோக்க சிறப்பு நிகழ்ச்சியாகும். மேலதிக புதிய அரங்குகளும், சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதனால், ஷாங்காய் மாநகருக்கும் சீனாவுக்கும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளும், குறிப்பிட்டத்தக்க சர்வதேசப் பயன்களும் தரப்படும் என்று இந்நிறுவனத்தின் முதன்மை செய்தி அலுவலர் Ricardo Martin வலியுறுத்தினார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு வந்து, பல்வேறு நாடுகளின் பண்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை பன்முகங்களிலும் உணர்ந்து கொள்வதை அவர் எதிர்பார்க்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040