• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் சீரான ஆயத்தப் பணி
  2010-04-29 15:35:55  cri எழுத்தின் அளவு:  A A A   

30ம் நாளிரவில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா ஹுவாங்பூ ஆற்றின் இரு கரைகளிலும் கோலாகலமாகத் துவங்கும். பெரும்பகுதி, வெளிநாட்டுச்  செய்தியாளர்கள் உள்ளிட்ட சுமார் 14 ஆயிரம் செய்தியாளர்கள் இப்பொருட்காட்சியின் செய்தி அறிவிப்பில் கலந்து கொள்கின்றனர். வெளிநாட்டுச் செய்தியாளர்கள், இப்பொருட்காட்சியின் ஆயத்தப் பணியைப் பாராட்டுகின்றனர். அவர்களுக்கு வழங்கிய பல்வகை ஆதரவு குறித்து அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர்.


மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்பது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பாகும். 264 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்கின்றன. உலகின் 7 கோடி மக்கள் இப்பொருட்காட்சியைப் பார்வையிடுவர் என்று மதிப்பிடப்படுகிறது. இத்தகைய பெரியளவு எண்ணிக்கையை அறிந்து, ஸ்விட்சர்லாந்து செய்தியாளர் Pillip Hoff வியப்படைந்தார்.

இது நம்ப முடியாத அளவில் பெரிய பொருட்காட்சியாகும். ஸ்விட்சர்லாந்தின் மொத்த மக்கள் தொகை 70 இலட்சம் மட்டுமே. அடுத்த 6 திங்களில் ஷாங்காய்க்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையோ 7 கோடியை எட்டும். இது எங்களது மக்கள் தொகையின் 10 மடங்காகும் என்று அவர் கூறினார்.
செய்தியாளர்களுக்குச் சேவை புரியும் செய்தி மையம் 27ம் நாள் துவங்கியுள்ளது. 184 நாட்கள் காட்சி காலத்தில், இது செய்தியாளர்களுக்கு தகவல் ஆலோசனை, பேட்டி, தொழில்நுட்பச் சேவை முதலிய சேவைகளை வழங்கும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தொண்டர்கள் மற்றும் பணியாளர்களின் நட்பு, நமீபிய செய்தியாளர் Tanya Knightleyயின் உள்ளத்தில் ஆழப்பதிந்தது.

இப்பொருட்காட்சியின் அளவு எனது எதிர்பார்ப்பை பெரிதும் தாண்டியது. இங்குள்ளஅனைவரும் மிக நட்பானவர்கள். சீன மக்கள் இதற்காக பெரிய முயற்சி மேற்கொண்டு சீரான சேவை புரிகின்றனர். இங்கு வந்து அருமையான அனுபவங்களை பெறுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மேடையில், மனிதகுலத்தின் அறிவும் எதிர்கால கனவும் வெளிப்படுத்தப்படும். இது  பற்றி சீன வானொலியில் பணி புரிகின்ற சூடான் செய்தியாளர் Osama Mokhtar Mohamed Bashir கூறியதாவது,

பல்வேறு நாடுகளின் மிக முன்னேறிய தொழில்நுட்பம் இப்பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும். நிதி நெருக்கடியின் பாதிப்பை முழுமையாக நீக்காத காலத்தில், இது, பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றும் என்று நம்புகிறேன் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040