• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலக பொருட்காட்சிக்கான விருப்பம்
  2010-04-30 10:22:19  cri எழுத்தின் அளவு:  A A A   

2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கவுள்ளது. இப்பொருட்காட்சி வெற்றிகரமாக அமையும் என்று பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும் மக்களும் இப்பொருட்காட்சியில் மிகவும் கவனம் செலுத்தி, இதற்கு சிறந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ரஷிய சீன சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை இப்பொருட்காட்சி முன்னேற்றும் என்பதில் ஐயமில்லை என்று, ரஷிய சுற்றுலாத்துறை அமைச்சர் Anatoliy Yarochkin தெரிவித்தார்.
2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியால், உலகத்தின் கவனம் சீனா மீது ஈர்க்கப்பட்டது. இது வெற்றிகரமாக நடைபெறும். சுற்றுசூழலும் அறிவியல் தொழில் நுட்பமும், இப்பொருட்காட்சியின் குவி மையமாகும் என்று, சீன கொள்கை பார்வை என்ற ஸ்பெயின் இணையத்தில் வெளியான கட்டுரை கூறியது. குடியரசு என்ற இத்தாலி செய்தியேடு அண்மையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அளவையும் சீனப் பொருளாதார வளர்ச்சியின் நிலைமையையும் வண்ணப்படத்தில் மூலம் எடுத்துக்காட்டியது. சீனா, ஒரு பெரிய வணிக மையமாகும் என்பதை இத்தாலி கருத்தில் கொள்ள வேண்டும். வாய்ப்புகளை இழந்துவிட்டால், தோல்வியை எதிர்கொள்ளக் கூடும் என்று கட்டுரை கூறியது.
ஷாங்காயின் நட்பார்ந்த நகரான இத்தாலியின் Milan நகர், 2015ம் ஆண்டில், புவியை வளர்த்து, உயிரினங்களுக்கு ஊக்கமளிப்பது என்ற உலகப் பொருட்காட்சியை நடத்தும்.
இதை தவிர, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கவிருப்பதை முன்னிட்டு, பெருவில் வாழ் சீனர்கள் பலர் ஷாங்காய்க்குச் சென்று, இப்பொருட்காட்சியைப் பார்வையிடுவர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040