• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்ககை
  2010-04-30 16:49:26  cri எழுத்தின் அளவு:  A A A   

அழகான வண்ணமிகு வான வேடிக்கைகளுடன், 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா, ஷாங்காய் மாநகரின் ஹுவாங்பு ஆற்றின் அருகில் நடைபெற்றது. இதையடுத்த 6 திங்கள் காலத்தில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பண்பாடு நிறைந்த ஒரு மாநாட்டை, இதில் கலந்து கொள்ளும் 246 தரப்புகள் அரங்கேற்றும். "மேம்பட்ட நகரம் மேம்பட்ட வாழ்க்கை"என்ற தலைப்பு, இவற்றில் முழுமையாக வெளிப்படுத்தப்படும். உலகில் மிக முன்னேறிய நாகரிகச் சாதனைகள், உலகின் பல்வேறு பகுதிகளின் பண்பாடுகளிடைப் பரிமாற்றம் முதலிய தலைசிறந்த அம்சங்களை, உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் கண்டு மகிழ முடியும்.

தற்போது, உலக மக்கள் தொகையில் 50விழுக்காட்டுக்கு மேலானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நகரங்களில், பல்வகை வாய்ப்புகளும் அறைகூவல்களும் நிலவுகின்றன. நகரங்களின் எதிர்கால வளர்ச்சி வழிமுறை மற்றும் அருமையான நகர வாழக்கையின் உள்ளடக்கம் பற்றிய சிந்தனை, மனிதகுலம் எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சினையாகும். நகரம் என்ற தலைப்பில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, தற்போதைய காலத்தின் தனச்சிறப்பியல்பை வெளிப்படுத்தும். அதேவேளை, பல்வேறு தரப்புகளின் புத்தாக்க ஆற்றலையும் இவ்வரங்கு வெளிப்படுத்தும்.

பன்னோக்க உலகப் பொருட்காட்சியை நடத்தும் முதலாவது வளரும் நாடான சீனா, இதை நடத்தும் தகுநிலையை பெற்றவுடன், ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்காக 8 ஆண்டு காலம் முழுமூச்சுடன் தயார் செய்தது. தொடர்புடைய ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிற்பகுதி காலத்தில், உலக நிதி நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், இதில் கலந்து கொள்ளும் ஏறக்குறைய அனைத்து தரப்புகளும் திட்டப்படி வருகை தந்தன. மனிதகுலம் கூட்டு வளர்ச்சியை காண, ஒன்றுபடும் நடவடிக்கை இதுவாகும். உலகப் பொருட்காட்சி நடைபெறும்போது, முழு உலகமும் ஒன்றுகூடி மகிழ்ந்து, கையோடு கை கோர்த்து, அருமையான எதிர்காலத்தை உருவாக்க முயற்சிக்கும்.

ஒவ்வொரு உலகப் பொருட்காட்சியும் பெரிய அளவில் அல்லது சிறிய அளவில் நடைபெற்ற பின், மனிதகுலம் புதிய வரலாற்று முன்னேற்றத்தில் நுழைந்துள்ளது. இது வரலாறு. அமெரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லே உலகப் பொருட்காட்சியின் முக்கியத்துவத்தைத் தொகுத்துக்கூறியபோது, இதைத் தெரிவித்தார். கடந்த பல்லாண்டு வளர்ச்சியின் மூலம், இக்கூற்றின் தவறின்மை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, உலகப் பொருட்காட்சி முதல்முறையாக வளரும் நாடென்றுக்கு வந்தபோதோ, முதல்முறை சீனாவுக்கு வருகை தந்தபோதோ, இதில் கலந்து கொள்ளும் தரப்புகள் தத்தமது நாகரிகச் சாதனைகளை முழுமையாக வெளிப்படுத்தி, முன்னேறிய நகர வளர்ச்சிக் கருத்துக்களை பரப்புரை செய்து, உலக மற்றும் மனிதக் குலத்தின் வாழ்க்கை மேலும் இன்பமாக மாற செய்ய வேண்டுமென்று, உலகின் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040