
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவிலுள்ள அமெரிக்க காட்சி அரங்கு மக்களுக்கு திறக்கப்படும் துவக்கத்தைக் கொண்டாட, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி க்ளின்டன் அம்மையார் ஏப்ரல் 30ம் நாள் வாஷிங்டனில் விழா நடத்தினார். அமெரிக்க அரங்கு, சீன-அமெரிக்க மக்களிடை பரிமாற்றத்தை முன்னேற்றி இரு நாட்டுறவின் நீண்டகால வளர்ச்சிக்கு அடிப்படையிட வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்தார். உலகப் பொருட்காட்சி மூலம், எதிர்காலத்தின் பல்வேறு சாத்தியகூறுகளை கணிக்க முடியும். உலகப் பொருட்காட்சி பூங்காவிலுள்ள அமெரிக்க அரங்கு, அமெரிக்காவை பயணிகளிடம் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று ஹிலாரி கிளிண்டன் அம்மையார் தெரிவித்தார்.