• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவரின் சந்திப்பு
  2010-05-01 19:13:58  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் மே திங்கள் முதல் நாள் ஷாங்காய் மாநகரில், உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் Barrosoஐச் சந்தித்துரையாடினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றிகரமாக துவங்கியதற்கு Barroso வாழ்த்து தெரிவித்தார். நடப்பு உலகப் பொருட்காட்சி, சீனாவின் வளர்ச்சி சாதனைகளை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்ல, ஐரோப்பிய-சீன புரிந்துனர்வு மற்றும் நட்புறவை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய அரங்கு, சீன-ஐரோப்பிய நட்புறவை அதிகரித்து, ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான இன்னொரு மேடையாக மாற வேண்டும் என்று ஹூச்சிந்தாவ் விருப்பம் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய சக்தியாகும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை வளர்ப்பதில் சீனா எப்போதும் கவனம் செலுத்துவதாக ஹூச்சந்தாவ் சுட்டிக்காட்டினார். ஐரோப்பாவுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த சீனா விரும்புவதாகவும் ஹூச்சந்தாவ் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040