• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியில் செழிப்பான கலை அரங்கேற்றங்கள்
  2010-05-02 18:56:13  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பொருட்காட்சிகள், கலை பரிமாற்றங்களின் அரங்காக எப்போதும் திகழ்கின்றன. நடப்பு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், 20 ஆயிரத்துக்கு அதிகமான கலை அரங்கேற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறான நடையுடை பாவனங்கள் கொண்ட அரங்கேற்றங்கள், உலகின் பல்வகை பண்பாட்டுக் கலையின் தனிச்சிறப்பியல்பை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன.

உலகப் பொருட்காட்சி பூங்காவில் உள்ள ஐரோப்பியக் கண்ட சதுக்கத்தில், மே முதல் நாள் முதல் 5ம் நாள் வரை நாள்தோறும் காலை 11 மணி முதல், 6 அழகிய ரஷிய மங்கையர்களின் அரங்கேற்றத்தை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

உலகப் பொருட்காட்சி பூங்காவில் உள்ள அமெரிக்கக் கண்ட சதுக்கத்தில், மெக்சிகோவைச் சேர்ந்த ஹரிஸ்கோ சோ ஆடல் குழு தொடர்ந்து 5 நாட்களில் அரங்கேற்றம் நடத்துகிறது. சில பத்து பேர் இடம்பெறும் இக்கலைக்குழு நாள்தோறும் 5 முறை அரங்கேற்றுகிறது.

தவிர, இதர நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கலை அரங்கேற்றங்கள், தத்தமது பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் கலைத் தனிச்சிறப்பை முழுமையாக வெளிப்படுத்தி, பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040